அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு..!
கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதற்கு அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது. […]Read More