தமிழ்நாட்டில் 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் – தேர்தல் கமிஷன்

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இதற்கான கணக்கீட்டு காலம் வரும் 11-ந் தேதியுடன் முடிகிறது. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு நேற்று வரை 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள், அதாவது 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 208 படிவங்கள் அதாவது 98.23 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 10 லட்சத்து 20 ஆயிரத்து 815 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 99.93 சதவீத படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 921 படிவங்கள் அதாவது 99.05 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!