ஹைலைட்ஸ்
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – மக்கள் அவதி | சதீஸ்
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கிய நிலையில், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை […]
5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் | சதீஸ்
தமிழகத்தில் இன்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 08.01.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]
“பில்கிஸ் பானோ வழக்கு” – உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு..! | சதீஸ்
பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மிக மோசமான கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரம் கட்டுக்குள் வரவே சில வாரங்கள் வரை ஆனது. அந்தக் காலகட்டத்தில் பல மோசமான சம்பவங்களும் நடந்தது. அப்போது பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் உலக நாடுகளைக் கூட அதிர வைத்தது. கூட்டுப் பாலியல் […]
பில்லியன் டாலர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக VinFast நிறுவனம் அறிவிப்பு! | உமாகாந்தன்
தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள VinFast, ஆலையை தூத்துக்குடியில் அமைக்க திட்டம். ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ஆலையின் கட்டுமானப் பணிகள் நடப்பு ஆண்டே துவங்கப்படும் என அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாவும், இதனால் 3,000-3,500 பேருக்கு வேலைவாப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு : நாளை முதல் டோக்கன் விநியோகம் | சதீஸ்
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பாக அரிசி, சர்க்கை உடன் கரும்பு மட்டுமே அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் செலவுக்கு ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
இன்று இலக்கை அடையும் ஆதித்யா எல் 1 | சதீஸ்
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் இன்று மாலை தனது இலக்கான எல்1 என்ற புள்ளியைச் சென்றடையும் என்று இஸ்ரோ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிமீ தொலைவில் இருந்தாலும் உலகில் தோன்றும் அனைத்து உயிர்களுக்கும் உயிர்நாடி என்றால் அது சூரியன் தான். சூரிய கதிர்களே பூமியில் அனைத்து உயிர்களும் தோன்ற அடிப்படை காரணமாக இருக்கிறது. மரம், செடிகளில் நடக்கும் ஒளிச்சேர்க்கை என்பது நடக்கச் சூரிய ஒளி முக்கியம். சூரியனும் அதன் […]
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார்! |சதீஸ்
சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று (ஜன.6) அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து துவங்கியது. இந்த மாரத்தான் ஓட்டம் 10 கி.மீ, 21 கி.மீ, 32 கிமீ, மற்றும் 42 கி.மீ தொலைவுகளில் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஆண்கள் பெண்கள் முதியவர்கள் என 20,000 பேர் கலந்து கொள்ளும் இந்த மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்த […]
உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு | சதீஸ்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக […]
பொங்கல் பரிசுகளுடன் ரூ.1000 – முதலமைச்சர் அறிவிப்பு! | சதீஸ்
பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன் காரணமாக, பொங்கல் பரிசாக, அரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்படும் என சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்க […]
இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்1 | சதீஸ்
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனை ஆய்வு செய்யவதற்காக ஆதித்யா எல்1 விண்ணகலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் […]