வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 07)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 7 கிரிகோரியன் ஆண்டின் 97 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 98 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 268 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான்.
529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார்.
1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள்.
1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு வந்தது.
1789 – மூன்றாம் செலீம் உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமின் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
1827 – ஆங்கிலேய மருந்தியலாளர் ஜோன் வோக்கர் தான் முந்தைய ஆண்டு கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1829 – பின்னாள் புனிதர் இயக்கத்தின் நிறுவனர் இரண்டாம் யோசப்பு இசுமித்து மோர்மொன் நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.
1831 – பிரேசிலின் முதலாம் பெட்ரோ பேரரசர் தமது பதவியைத் துறந்து, தனது சொந்த நாடான போர்த்துகல் நான்காம் பேதுரோ என்ற பெயரில் மன்னரானார்.
1868 – கனடாக் கூட்டமைப்பின் தந்தைகளுள் ஒருவர் தோமசு டார்சி மெக்கீ படுகொலை செய்யப்பட்டார்.
1906 – விசுவியசு எரிமலை வெடித்தில் நாபொலியில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1906 – எசுப்பானியா மற்றும் பிரான்சு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927 – முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.
1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை சப்பான் கைப்பற்றியது.
1943 – உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான சப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946 – பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1948 – உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.
1948 – சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் உயிரிழந்தனர்.
1955 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1964 – ஐபிஎம் தனது சிஸ்டம்/360 ஐ அறிவித்தது.
1978 – யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல்துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
1978 – நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் கை விட்டார்.
1983 – ஸ்டோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் விண்ணோடம்|விண்ணோடத்தில்]] இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1989 – கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
1990 – எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில் 159 பேர் உயிரிழந்தனர்.
1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டாவின் கிகாலியில் துட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
1995 – உருசியத் துணை இராணுவப் படைகள் செச்சினியாவின் சமாசுக்கி நகரில் பொதுமக்களைத் தாக்கிக் கொன்றன.
2003 – அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது.
2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
2009 – பெருவின் முன்னாள் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பொதுமக்கள் படுகொலைகள், கடத்தல்களுக்கு உத்தரவிட்டமைக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
2015 – தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டு ஆந்திரப்பிரதேச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1506 – பிரான்சிஸ் சவேரியார், இயேசு சபையைத் தோற்றுவித்த எசுப்பானியப் புனிதர் (இ. 1552)
1770 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)
1889 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)
1890 – விக்டோரியா ஒகாம்போ, அர்ச்செந்தீன இலக்கியவாதி, எழுத்தாளர் (இ. 1979)
1894 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1987)
1903 – மு. பாலசுந்தரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1965)
1920 – ரவி சங்கர், இந்திய-அமெரிக்க சித்தார் கலைஞர் (இ. 2012)
1926 – பிரேம் நசீர், இந்திய நடிகர் (இ. 1989)
1935 – எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர்
1944 – மகொடோ கோபயாஷி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
1944 – கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் 7வது அரசுத்தலைவர்
1947 – மக்தூம் சகாபுதீன், பாக்கித்தானிய அரசியல்வாதி.
1954 – ஜாக்கி சான், ஆங்காங் நடிகர்
1962 – ராம் கோபால் வர்மா, இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
1962 – கோவை சரளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1964 – ரசல் குரோவ், நியூசிலாந்து-ஆத்திரேலிய நடிகர்

இறப்புகள்

AD 30 – நாசரேத்தின் இயேசு கிறித்து, (சிலுவையில் அறைந்த நாள்)[1][2][3] (b. circa 4 BC)
1614 – எல் கிரேக்கோ, கிரேக்க-எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1541)
1804 – டூசான் லூவர்சூர், எயிட்டி இராணுவத் தலைவர் (பி. 1743)
1891 – பி. டி. பர்னம், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1810)
1947 – ஹென்றி ஃபோர்ட், அமெர்க்கத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1863)
1971 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் (பி. 1904)
1979 – ஏ. வி. பி. ஆசைத்தம்பி, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாளர் (பி. 1929)
1998 – எஸ். வி. வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1911)
2001 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய இயற்பியலாளர் (பி. 1922)
2004 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய செவ்வியல் நடனக் கலைஞர் (பி. 1926)
2009 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார அறிஞர் (பி. 1922)
2014 – வி. கே. மூர்த்தி, தென்னிந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)
2015 – கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)

சிறப்பு நாள்

ருவாண்டா இனப்படுகொலை நினைவு நாள்
பெண்கள் நாள் (மொசாம்பிக்)
உலக சுகாதார நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!