(கண்)காட்சிப் பிழை! சாய்ரேணு 1.1 ஒரு முன்னுரை “ஹலோ, போலீஸ் கமிஷனர் பேசறேன். யாரு டிஎஸ்பியா பேசறது?” ‘டிஸ்பி மொபைல் ஃபோனில் டிஎஸ்பி தான் பேசுவார், எஸ்பிபியா பாடுவார்?” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்ட டிஎஸ்பி “எஸ் சார்” என்றார் பவ்யமாக. “ஒரு வாரத்திற்கு முன்னாடி நுங்கம்பாகத்திலே பெரிய திருட்டு நடந்ததில்லையா? அந்தத் திருடங்க இன்றைக்கு மாலை கண்காட்சி நடக்கற இடத்திற்கு வராங்களாம்! இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு.” “அடடா! உங்களுக்கு யாரோ தப்பா இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க சார். அது […]Read More
காலை பத்து மணி. வாசலில் ஹாரன் சப்தம், காதை கிழித்தது. சுரேஷ், வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்தான். ஹரி, பைக்கில் இருந்தவாறே கேட்டான், “என்னடா இன்னும் ரெடியாகலையா?” “இதோ ரெண்டே நிமிஷம்னா, வந்துடுறேன்!” சுரேஷ், பதில் சொல்லிக்கொண்டே வெளியே வந்து, வீட்டைப் பூட்டினான். சுரேஷ் வந்து பைக்கில் ஏறியதும், ஹரி ஆக்ஸிலேட்டரைத் முறுக்க, அந்தச் சின்ன கிராமத்தின் சந்துப் பொந்துகளில் எல்லாம் வண்டி சீறிப்பாய ஆரம்பித்தது. ஹரி, அந்த கிராமத்திற்கு அருகிலேயே, சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட […]Read More
பெரும் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. “பேஞ்சா இப்பிடித்த பேஞ்சிட்டே இரிக்கும்.. இல்லேனே கெடந்து வெய்யில் கொளுத்தும்….” வானத்தை அண்ணாந்து பார்த்தபடி சலித்துக் கொண்டார் தள்ளு வண்டி காய்கறி வியாபாரியான முத்து ராவுத்தர். இன்னைக்கும் வியாபாரம் செய்ய முடியாதபடிக்கு காலையிலேயே வானம் இருட்டிக் கொண்டிருந்தது. கல்யாணமென்பது சந்தை வியாபாரமாகிவிட்டது! ஒரு பெண் என்றாலே முழி பிதுங்கும் இந்தக் காலத்தில் முத்து ராவுத்தருக்கு மூன்று பெண்கள். முதல் பெண்ணை எப்பாடுபட்டாவது தாட்டியாகணும் என்று தெரிந்தவர்கள் மூலம் நிறைய […]Read More
ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட கைதிக்கு உடனேயே விடுதலை கிடைத்து வெளிவிடப்பட்டடால் எப்படியிருக்குமோ அப்படியான மகிழ்ச்சியில் இப்போது தத்தளித்தனர் ராகவனும் லட்சுமியும். நீண்ட நாளைக்குப் பிறகு மனம்விட்டுச் சிரித்தார் ராகவன். “தீபா…?! தீபா… ?!” இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கமா எல்லாம் எடுத்து வச்சாச்சா நேரமாயிட்டே இருக்கு அப்புறம் கடைசி நிமிஷத்துல இத மறந்துட்டேன் அதை மறந்துட்டேன் சொல்லாத சரியா…? அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்திவிட்டு, எல்லாம் ரெடிங்க வண்டி வந்தா கிளம்ப வேண்டியது தான். எட்டு […]Read More
கடிதம் சிரித்தது. கடிதத்தைக் கையில் பிடித்திருந்த ராகவன் சிலையாய்ச் சமைந்து நின்றார். ‘நர்மதாவா..? என் பெண் நர்மதாவா..?’ கேள்விகளும் குழப்பங்களும் அவரைச் சுற்றி அலையடிக்க, நெடுமரமாய் நின்றார். “என்னாச்சுங்க..?” என்றபடி நெருங்கி வந்தாள் லட்சுமி. “உன் பொண்ணு நம்ம தலைல கல்லப் போட்ருவா போலருக்கு லட்சுமி…” குழறி வந்தன வார்த்தைகள். “என்னது..? என்ன சொல்றீங்க..?” “நர்மதா யாரையோ காதலிக்கறா போலருக்கு..” “என்னது..? நம்ம நர்மதாவா..? சான்ஸே இல்லைங்க…” “கைல லெட்டரை வெச்சுக்கிட்டு பொய்யாடி சொல்றேன்..? படிக்கறேன், கேளு. […]Read More
மறக்குமா உந்தன் முகம் ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள். கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம். குளத்தங்கரையில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில் அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான் அவன் 6 ஆம் […]Read More
அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு. என்னுடைய பயண லக்கேஜ் முன்பாகவே கோனார் வண்டியிலேறி போய்விட்டது. பெரிதாக ஏதுமில்லை. ஒரே ஒரு சூட்கேஸ்தான். முதுகில் பின்புறம் தொங்கும் பை அவ்வளவே. அருகில் தேனம்மை நடந்து வந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போகையில் […]Read More
‘சீனி’வாசன் பரிவை சே.குமார் பொருட்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாசலில் நின்ற ஐஸ் வண்டியைப் பார்த்ததும் ‘அம்மா ஐஸ்’ என்றான் சந்தோஷ். “என்னவாம்..?” திரும்பி நின்று கேட்டார் சீனிவாசன். “அ…ய்…ஸ்சு” மெல்ல இழுத்தான். “நொய்சு… போட்டேனா… இன்னும் உள்ளகூடப் போகல அதுக்குள்ள திங்கிறதுக்கு வாங்கிறணும்… வாடா பேசாம…” கத்திவிட்டு வேஷ்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார். “லூசு… இதோட வந்தா எதையும் வாங்கித் திங்க விடாது…” வாய்க்குள் முணங்கினான். “சும்மா வாடா… காதுல கேட்டா ரகுவரன் […]Read More
நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக.. “போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை நாளன்று போய் வந்ததோடு சரி.. ..”இந்தத் தரம் நம் வீட்டு முறை ஒருநாள் பண்றோம் ராஜி.குடும்பத்தோடு வந்துருங்க” என்று அத்தை அழைத்து விட்டு மாமியாரிடமும் சொன்னார்.. விடுமுறைக்கு வந்திருந்த நாத்தனார்..”போய்ட்டு வாங்க அண்ணி..நான் பார்த்துக்கறேன்..”என்றாள். […]Read More
அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும். நிச்சயமாக எந்த ஒரு தனி மனிதரையும் வளர்ப்பது புத்தகம் மட்டுமே அதைப் படிப்பதனால் மட்டுமே அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சி அடைகிறார் என்பது மிகையல்ல. 1093 சாதனங்கள் கண்டுபிடித்தற்குக் காப்புரிமை பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்