இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார். இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது. பிறகு […]Read More
சர்வதேச உலக நீதி தினம் 2010ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தினம் தேர்வு செய்யப்பட்டது. இத்தினத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், இனப்படுகொலை போன்ற பிரச்சனைகளின்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் 1894ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வானியலாளரான ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் (Georges Henri Joseph Edouard Lemaitre) பெல்ஜியத்தில் பிறந்தார். இவரே […]Read More
சூரத் நகரில் உள்ள நகைக்கடைக்காரர் ஒருவர், வைரம் பதிந்த மாஸ்க்குகளை தயாரிக்கிறார். கைத்தறி, டிசைனர் மாஸ்க்குகள் எனப் பல வித மாஸ்க்குகள் பட்டியலில் வைர மாஸ்க்குகளும் சேர்ந்துள்ளன.உலகமெங்கும், கொரோனாவை சமாளிக்க மருத்துவமனை கட்டுகிறார்கள், வென்டிலேட்டர்கள் தயாரிக்கிறார்கள். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முகக் கவசங்களை சமூகங்களுக்கு பெருமளவில் கொடையாக அளிக்கின்றன. ஆனால், குஜராத்தில் சில பணக்காரர்களுக்கு நோய்த் தடுக்க அணியும் மாஸ்க் கூட டாம்பீகத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பம்தான் போலும். முன்னர் தங்கத்தில் செய்த மாஸ்குகள் செய்திகளில் அடிபட்டனRead More
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி (Aruna Asaf Ali) 1909ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஹரியானா மாநிலம் கால்கா நகரில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருந்தே சுதந்திர வேட்கையும், துணிவும் கொண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். 1958ஆம் ஆண்டு டெல்லியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார். மாநகர நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அமைதிக்கான லெனின் […]Read More
கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார். 1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1946-52ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் ‘கருப்பு காந்தி’ என்றும் […]Read More
ஒவ்வொரு தமிழ் ரசிகன் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து 1953ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தார். இவர் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவருடைய முதல் பாடல் ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ ஆகும். பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் மாநில விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். கவியரசு என்றும், கவிப்பேரரசு […]Read More
தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை 1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மதுரையில் பிறந்தார். இவர் 2004ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் நிறுவனத்தால் தயாரிப்பு மேம்பாட்டு துறையில் துணை தலைவராகவும், Chrome and apps-ல் மூத்த துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு கூகுளின் Gmail and Google Maps போன்ற பல பயன்பாடுகளின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட அமர்த்தப்பட்டார். 2013ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் […]Read More
உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. கா.மீனாட்சிசுந்தரம் தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றிய கா.மீனாட்சிசுந்தரம் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் […]Read More
தமிழ் திரையுலக இயக்குநர், கே.பாலசந்தர் (Kailasam Balachander) 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். 1964ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது. இவர் ‘கவிதாலயா’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் பத்மஸ்ரீ விருது, தாதா […]Read More
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் சந்திதாஸ் கங்குலி 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (God of the Off Side) என அழைக்கப்படுகிறார். இவர் 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார். 2004ஆம் ஆண்டு […]Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!