தமிழ் பாடல்களை பாடி அசத்தும் தென்னாப்பிரிக்க பெண்..!

தென்னாப்பிரிக்க பெண் ஒருவர் தமிழ் திரையிசை பாடல்களை அழகாக பாடி அசத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர். இணையம் உருவான பிறகு கணினி மொழியாகும் இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. குறிப்பாகத் தமிழ் திரைப்பட பாடல்களால் நமது தமிழ் மொழி கண்டங்களை கடந்து மொழிகளை கடந்து பல்வேறு நாட்டினருக்கு சென்றடைந்துள்ளது.

அவ்வகையில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகிய குரலால் தமிழ் பாடல்களை பாடும் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியாத்தி’ பாடலையும் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி பாடலையும் அச்சு பிசகாமல் தமிழில் அப்பெண் அழகாக பாடியுள்ளார்.

இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நபர், “நமது தாய் மொழியை பிறர் உச்சரிக்கக் கேட்கும் போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!