இந்திய அளவில் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளைக் குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும். ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 1973ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார். 1996ஆம் ஆண்டு இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய இவர், அக்டோபர் 2005ஆம் ஆண்டு இந்திய […]Read More
பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு பாகன்வாலே என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி பூல், குட்டா தே ஆத்மி, பெகனா பிந்த் உள்ளிட்ட 12 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பத்மஸ்ரீ, ஷிரோமணி சாஹித்கார், பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, சோவியத் லாண்ட் நேரு விருது உள்ளிட்ட ஏறக்குறைய 17 […]Read More
பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் […]Read More
கேரளா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளை தாக்கும். பறவைக் காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான பறவைகள் இறந்துள்ளன. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நிலைமைகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலால் கோழி, வாத்துகள் விற்பனை சரிந்துள்ளது. அவற்றை […]Read More
புதிய வகையிலான PVC ஆதார் அட்டை வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. முதன் முதலில் […]Read More
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு (மும்பை) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹர் […]Read More
கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் அண்டவியலும் (Cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (Quantum Gravity) ஆகும். 21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் உரையாடினார். 1986ஆம் ஆண்டு அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது. இவர் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற […]Read More
சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் நவம்பர் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சனை தீர்க்க முடியாமல் போனது. எனவே பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக் கொண்டுவர 1979ஆம் ஆண்டு இத்தினம் அறிவிக்கப்பட்டது. என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார். இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை […]Read More
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர், ஓவியர் மற்றும் அச்சு உருவாக்குநருமான வில்லியம் பிளேக் (William Blake) 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி லண்டனில் பிராட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய எழுத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சிந்தனைகள் ஆகியவை, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றன. 1783ல் “Poetical Sketches” என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. மேலும் தன் கவிதைகளை விளக்கும் வகையில் வண்ணச் சித்திரங்களைச் செதுக்கினார். ஓவியம் வரைதல் […]Read More
உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் பிறந்தார். யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார். சீன தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில், தற்காப்பு பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம், ஜூடோ, கராத்தே, குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )