அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு..!

 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு..!

கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதற்கு அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது.

புதுச்சேரி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 551 நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 85,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 4,000 ஊழியர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அதி கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் மாயமாகி உள்ளனர்.

இதனிடையே புதுச்சேரி முதல் ரங்கசாமி கனமழை சேதங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நமது அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் 10,000 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகளின் துயரத்தை போக்குவிதமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க அரசு முடிவு செய்யப்பட்டது.

கனமழையினால் இறந்த கால்நடைகளில் பசுமாடு ஒன்றுக்க ரூ.40,000. கிடாறி கன்றுகளுக்கு ரூ.20,000, சேதமழைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,00 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ரூ.100 கோடி அளவில் மழை பாதிப்பு சேதம் உள்ளதாக முதல் கட்டமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கனமழை நிவாரணத் தொகையை விரைந்து காலத்தோடு அளித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...