சென்னை: விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆன்லைன் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தொழில்துறைக்கு தயார்நிலை கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் சென்னை ஐஐடி ஆன்லைன் பிஎஸ் வானூர்தியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் (B.S Aeronautics…
Category: நகரில் இன்று
தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு பயிற்சி
சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து அணைப்பது எப்படி என தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விபத்து இடத்துக்கு வருவதற்குள் தீயை கட்டுக்குள்…
சென்னையில் கடுமையான பனிமூட்டம்
சென்னை: கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. இதனால் மும்பை, கோலாலம்பூர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், துபாயிலிருந்து வந்த…
கடைசி நேரத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு ரத்து: சென்னையில் தேர்வர்கள் சாலை மறியல்
சென்னை: தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, நேற்று நடைபெற இருந்த குரூப்-2, 2ஏ மெயின் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னையில் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு…
எஸ்.பி முத்துராமன், எம்.என்.ராஜம், அவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருது
சென்னை: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித்துறை…
புதிய உச்சம் தொட்ட மதுரை விமான நிலையம்!
மதுரை: 2024-ம் ஆண்டை காட்டிலும், 2025-ம் ஆண்டு உள்நாட்டு பயணிகள் வருகை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், 2025-ம் ஆண்டு மதுரை விமான நிலையத்துக்கு நம்பிக்கையூட்டும் ஆண்டாக அமைந்துள்ளது. மதுரை விமான நிலையத்துக்கு 2025-ம் ஆண்டு பயணிகள் வருகை முந்தைய…
சென்னையில் பறவைக் காய்ச்சல்
சென்னை: காகங்கள், பறவைகள் இறந்து கிடந்தால் வெறும் கைகளால் தொடக்கூடாது என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்ததில், அவை ஹெச்5.என்1 பறவைக் காய்ச்சல் வைரஸ்…
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது
சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான இத்தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்துகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு…
மார்ச் முதல் வாரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்…
11-ம் தேதி துணைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை
தமிழகத்தில் வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், பிப்.11-ம் தேதி தமிழகம் வரும் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, மாநிலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள், இறுதி வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்கிறார். தமிழகம்…
