பாப்கார்ன்
‘கொஞ்சம் பேசினால் என்ன?’ படம் எப்படி இருக்கு… விமர்சனம்..!
பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓவியரான அஜய் (வினோத் கிஷன்), ஆறு ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார். துரதிர்ஷ்டவசமாக கொரோனா பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட, தன் வீட்டிற்குள்ளேயே நாள்களைக் கடத்துகிறார். அப்போது ஆடை வடிவமைப்பாளரான சஞ்சனாவுடன் (கீர்த்தி பாண்டியன்) சமூக வலைத்தள வழியில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகக் கனிகிறது. ஒருவரை ஒருவரை நேரில் பார்த்துக்கொள்ளாமல், வீடியோ கால்களில் வளரும் இக்காதலானது, சில பல உரசல்களுக்குப் பின் இறுதியில் என்ன ஆனது, […]
ராயனுடன் மோதும் மகாராஜா..!
தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ஜூன் மாதம் வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், தனுஷ்க்கு போட்டியாக விஜய் சேதுபதி தனது படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. அந்தப்படத்தின் மிகப்பெரிய அப்டேட் இன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தனுஷின் ராயன் படத்துக்கு போட்டியாக விஜய் சேதுபதி […]
ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு..!
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி […]
இமயமலைக்கு செல்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..! | உமாகாந்தன்
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரகால பயணமாக இமயமலைக்கு இன்று செல்கிறார். நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். […]
சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம் இது” ஜான்வி கபூர் நெகிழ்ச்சி..! | உமாகாந்தன்
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்கு இன்று வருகை தந்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “முதன்முறையாக முப்பாத்தம்மன் கோயிலுக்கு வந்தேன். சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம் இது” என தெரிவித்துள்ளார். மேலும் கோயில் வாசல் முன்பு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டியைக் காண ஜான்வி […]
‘அடிமாட்டு விலைக்கு பேரம்’ பரிதாப நிலையில் புஷ்பா 2..! | உமாகாந்தன்
பாலிவுட் படங்களை பார்க்கவே ரசிகர்கள் தயாராக இல்லாத நிலையில் தெலுங்கு திரையுலகம் இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அந்தப் படத்தை அதிக விலைக்கு விற்க படக்குழு நினைத்துக் கொண்டிருக்க அதற்கு மாறாக விநியோகஸ்தர்கள் தற்போது அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியான […]
“ராயன்” திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவு..!
ராயன் திரைப்படத்தின் பின்னணி இசைகோர்ப்பு நிறைவடைந்துள்ளது. புயல் வருகிறது என நடிகரும் இயக்குநருமான தனுஷ் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருகின்றார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். அதே சமயம் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி […]
‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு கிடைத்த விருதுகள்..!
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சார்பில் நான்கு விருதுகள் பெறப்பட்டுள்ளன. உலகப் புகழ் பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ் விழா கடந்த மே 14 முதல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் கீழ் படங்கள் திரையிடப்பட்டும், விருதுகளும் வழங்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் இந்த விழாவில் இந்திய சார்பில் நான்கு விருதுகள் பெறப்பட்டுள்ளன. சிறந்த சாதனையாளர் (பியர் […]
பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’
அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த திரைப்படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் மூன்று […]
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12-ல் வெளியாகிறது..!
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த […]