விஜய் ஆண்டனியின் ஹிட்லர் பட டீசர் வெளியானது..! | சதீஸ்

 விஜய் ஆண்டனியின் ஹிட்லர் பட டீசர் வெளியானது..! | சதீஸ்

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் படத்தின் டிசர் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கியவர் விஜய் ஆண்டனி. சுக்ரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி. தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே கிழக்கு கடற்கரை சாலை படத்தில் கேமியோ ரோலில் நடித்து நடிகரானார். இதைத் தொடர்ந்து நான் படத்தில் ஹீரோவா நடித்திருந்தார். இசையமைப்பாளராக தன்னை நிரூபித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.

நான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன், பாகிஸ்தான், சைத்தான், எமன் என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார். இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகராக கலக்கி வந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குரனாக மாறினார். வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட அந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கொலை மற்றும் ரத்தம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் அரங்கேறியுள்ளது. அவரது மூத்த மகள் மீரா, மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த திரைத்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனைத்து தரப்பினரும் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மீளமுடியாத இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர விஜய் ஆண்டனி படத்தின் மீது கவனத்தை செலுத்தி வருகிறார்.

தற்போது விஜய் ஆண்டனி ஹிட்லர் படத்தில் நடித்துள்ளார். சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக விஜய் ஆண்டனியின் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

ஹிட்லர் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பரவலாக பேசப்பட்ட நிலையில், இப்படத்தில் டீசர் வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த டீசரின் தொடக்கத்தில், நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டு என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்ற வாசகத்துடன் டீசர் தொடங்குகிறது. துப்பாக்கி சத்தம், ரத்தம் தெறிக்க திகிலூட்டும் வகையில் இசையிலும், வீடியோவும் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் வெளியாகி உள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...