Tags :இன்பா

பாப்கார்ன்

ராகவா லாரன்ஸ் முடிவு:

ஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு:         சினிமா மற்றும் சமூகப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவர் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். தனது அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய அனைத்து மதத்தவரும் ஒன்றாக வழிபடக் கூடிய ஒரு கோவிலைக் கட்டப் போவதாக அறிவித்திருக்கிறார்.Read More

விளையாட்டு

தோனியின் மாஸ் என்ட்ரி;

சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!!  சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.      இந்திய அணி ‘சீனியர்’ தோனி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. வரும் ஐ.பி.எஸ்., தொடரின் 13வது சீசனில் சென்னை அணி கேப்டனாக களமிறங்குகிறார்.     இதற்காக பயிற்சியில் ஈடுபட தோனி, சென்னை வந்தார். வழக்கம் […]Read More

முக்கிய செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடக்கம்….

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்குகிறது:    தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8 லட்சத்து 16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா். இவா்களில் 4 லட்சத்து 41,612 மாணவிகள், 3 லட்சத்து […]Read More

நகரில் இன்று

அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை..!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள கனரா வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த கணேசன் என்பவர் வங்கியின் உணவருந்தும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.    சனிக்கிழமை காலை 10:30-க்கு வழக்கம்போல் பணிக்கு வந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்Read More

கைத்தடி குட்டு

காரைக்கால் – இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து….

   காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா தெரிவித்தாா்.   காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.    கூட்டத்துக்கு மத்திய கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தாா். மாநில அரசின் துறைமுகத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, சுற்றுலாத் […]Read More

கைத்தடி குட்டு

பால் அருந்துவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருமா?

   பால் அருந்துவதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் பால் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, சர்வதேச தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.     நாள் ஒன்றுக்கு ஒரு கப்-க்கும் குறைவாக பால் குடிக்கும் பெண்களுக்கு 30% மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.      […]Read More

3D பயாஸ்கோப்

லைக்கா நிறுவனத்துக்கு கமல் கடிதம்:

பாதுகாப்பை உறுதி செய்த பிறகு படப்பிடிப்பு:    சென்னை: படப்பிடிப்பு தளத்தில் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என லைக்கா நிறுவனத்துக்கு நடிகா் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளாா்.    இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடித விவரம்: மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பிப்.19 அன்று நடந்த அந்த நிகழ்வு, நம்முடன் சாப்பிட்டபடி, பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் பணியாற்றிய அவா்களின் மகிழ்ச்சி நீடித்திருக்கப் போவதில்லை என்பதும் அவா்கள் திரும்ப […]Read More

அண்மை செய்திகள்

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டனர் டிரம்ப் – மெலானியா .

   புது தில்லி: தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு ஒரு மரக்கன்றினை நட்டு வைத்துள்ளார்.    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அரசு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தில்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இருவரும் இன்று காலை வந்தனர்  காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்துவிட்டு, நினைவிடத்தை சுற்றி […]Read More

விளையாட்டு

வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

   4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது.     உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடாின் முதல் போட்டி வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் நடைபெற்றது.    இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் […]Read More

பாப்கார்ன்

உள்நாட்டு விவகாரங்களில் அந்நியா்களின் தலையீட்டை அனுமதிக்க முடியாது:

குடியரசு துணைத் தலைவா்:     இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.    கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை காலை தனி விமானம் மூலம் வந்த வெங்கய்ய நாயுடு, முன்னதாக கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:    கற்றல் என்பது ஒரு தொடா் […]Read More