இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..! ராஜஸ்தான் மாநில நீதித்துறை பணியில் இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் என்ற இளைஞர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் மானசரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங்(21). இவர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது ஐந்தாண்டு சட்டப்படிப்பான எல்.எல்.பி படிப்பை கடந்த ஏப்ரல் மாதம் […]Read More
Tags :சேவியர்
மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை!புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ: புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை’ என்று கடுமையாக சாடினார்.Read More
சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு! தனது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் மாநில காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்திருக்கும் தனக்கு சொந்தமான ஆசிரமத்தில், சிறுமிகளை அடைத்து வைத்து துன்புருத்துவதாகவும், அவர்களுக்கு மூலைச்சலவை செய்து தனக்கு சாதகமாக அவர்களை பேச வைக்க நித்யானந்தா முயற்சிப்பதாகவும் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நித்யானந்தா […]Read More
சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி: லடாக்கில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 4 ராணுவ வீரா்களும், 2 உதவியாளா்களும் உயிரிழந்தனா். 2 ராணுவ வீரா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா். இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: சியாச்சினின் வடக்கு பனிச்சிகரப் பகுதியில் சுமாா் 18,000 அடி உயரத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. […]Read More
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மாம்பழம், வெண்பட்டு வேட்டி, வெள்ளி கொலுசு தயாரிப்பு மட்டும் சேலத்துக்கு புகழ் சேர்க்கவில்லை… ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தியிலும் சேலம் அகில இந்திய அளவில் முக்கிய இடம் வகிக்கிறது. ம த்திய அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பல வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பதிவு […]Read More
சிறுநீரை குடிக்க வைத்து, அடித்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் பலி! போராட்டத்தில் குதித்த மக்கள்! பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவரை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவர் அங்குள்ள உயர் சாதியினரால் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரை அடித்து துன்புறுத்தியதுடன், சிறுநீர் குடிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு […]Read More
தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்? உங்களுக்காக டைட்டனின் புதிய வாட்ச் இது புது தில்லி: தமிழன்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கே உங்களுக்காக டைட்டன் நிறுவனம் புதிய கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றி யோசி என்பது எப்போதும் தொழில் நிறுவனங்களின் தாரக மந்திரமாக இருக்கும். அந்த வகையில் டைட்டன் யோசித்ததில் உதயமாகியிருக்கிறது தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரம். ரோஸ் […]Read More
உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் உறுதி சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் சொல்கின்றனர். தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது.தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். தேர்தலை நிறுத்துவது எங்களின் நோக்கம் இல்லை. இதனை நாங்கள் சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் கூறியுள்ளோம். அதிமுக தேர்தலை நடத்தாது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் […]Read More
மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை கடலூரில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது கோட்டேரி கிராமம். இப்பகுதியில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கனிமவளங்களை என்எல்சி நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகளை முறையாக மூடாமல் அப்படியே விட்டுசென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் பனை மட்டை […]Read More
செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!! செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும் என்று கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மடிடிக் கணினி வழங்கினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே காணாடுகாத்தானில் உள்ளது அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா […]Read More