ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்.. அன்பிலும் ஆறுதலிலும் இன்பத்திலும் ஈர்ப்பிலும் உண்மையிலும் ஊடலிலும் எண்ணத்திலும் ஏற்பதிலும் ஐயம் நீங்குவதிலும் ஒத்துழைப்பதிலும் ஓடியுழைப்பதிலும் ஒளதாரியதிலும் வாழும் வரை இருப்பது வாழ்க்கை துணை மட்டுமே
Tag: கார்த்தி ஜெகன்
ஏக்கம்
கடவுள் நம்பிக்கை கரைகிறது.. கண்கள் கண்ணீரால் நிறைகிறது.. நெஞ்சம் கணமாகி உறைகிறது.. கண்களில் ஏக்கமும், கைகளில் தவிப்பும், உடலும் மனமும் ரணமாக குழந்தை வேண்டி தாயுள்ளத்தோடு காத்திருக்கும் பெண்மையை காணும் போது!
கோபம்
கோபத்தின் கூர்மையான ஆயுதம் வேகமான வார்த்தைகள் என்றால்… கோபத்தின் மிகச் சிறந்த கேடயம் மௌனம் …
பெண்
பெண் குழந்தையா என்ற கேள்வியுடன் பிறக்கிறாள் பெண் சிறுமியாய் சிறகடிக்கும் வயதில் பருவம் எய்தி ஆச்சிரியங்களையும் அவஸ்தைகளையும் கடக்கிறாள் பெண் குமரியாய் படிப்பில் பதிந்து நட்புகளுடன் மகிழ்ந்து கவலை மறக்கிறாள் பெண் கன்னியாய் கல்யாண பந்தத்தில் கண்ணீருடன் பிறந்த உறவுகளையும் புண்கையுடன்…
நம்பிக்கை
கவலைகள் புதைக்கும் போது விதைகளாவோம்… கண்ணீரில் மூழ்கும் போது இலைகளாவோம்… தோல்விகள் சாய்க்கும் போது வேர்களாவோம்… சூழ்ச்சிகள் சூழும் போது முட்களாவோம்… மகிழ்ச்சி மணம் வீசும் போது மலராவோம்…
தண்ணீர்!
இயற்கையின் இலவச பரிசு இன்றைய வியாபாரத்தின் தலைவன் ஆகி விட்டது ஒட்டகமும் ஓடை நீரை விட்டு ஒப்பனை பூசிய நீரை குடிக்கும் கற்பனை வந்தாகிவிட்டது தவித்த வாய்க்கு இல்லாத தண்ணீர் தரம் கெட்ட குளிர்பானத்திற்கு தாராளமாக தந்தாகிவிட்டது பணகாரன் பாட்டில் நீரோடு…
நீ என்பதால்!
மெழுகாய் உருகுவேன் நீ என் ஒளி என்பதால் நிலவாய் வளர்வேன் நீ என் பௌர்ணமி என்பதால் மலராய் மலர்வேன் நீ என் வாசம் என்பதால் தென்றலாய் தீண்டுவேன் நீ என் சுவாசம் என்பதால் மேகமாய் வருவேன் நீ என் தாகம் என்பதால்…
