டெல்லி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்​தர் பிச்சை கருத்து

டெல்​லி​ ஏஐ மாநாட்​டின் 4-வது நாளில் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த கூகுள் தலை​மைச் செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை மாநாட்டில் பங்​கேற்​றார்.

அவர் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினத்​தில் கூகுள் சார்​பில் 15 பில்​லியன் டாலர் முதலீட்​டில் ஏஐ மையம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மானோருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். புதிய ஏஐ தொழில்​நுட்​பங்​கள் உரு​வாக்​கப்​படும். இந்​தியா முழு​வதும் தொழில் வாய்ப்​பு​கள் பெரு​கும்.

இந்​தியா, அமெரிக்​காவை இணைக்​கும் வகை​யில் கடலுக்கு அடி​யில் ஆப்​டிக் கேபிள்​கள் பதிக்​கப்​படும். இந்திய அரசு செயற்கை நுண்​ணறிவு தொழில் நுட்​பத்​தின் மூலம் விவ​சா​யிகளுக்கு வானிலை முன்​னறி​விப்​பு​களை வழங்​கு​கிறது.

இந்த முயற்​சியை பாராட்​டு​கிறேன். சுமார் 20 ஆண்​டு​களுக்கு முன்பு யூ டியூப் மூலம் பணம் சம்​பா​திக்க முடி​யும் என்று யாரும் நினைத்​துப் பார்க்​க​வில்​லை. இப்​போது லட்​சக்​கணக்​கானோர் யூடியூப் மூலம் லாபம் பெறுகின்​றனர். இன்​றைய காலத்​தில் ஏஐ தொழில்​நுட்​பம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த தொழில்​நுட்​பம் தொழில் துறை​யில் மிகப்​பெரிய மாற்​றங்​களை ஏற்​படுத்​தும். புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும்.

கூகுளின் டீப்​மைண்ட் நிறு​வனம், ஏஐ தொழில்​நுட்​பத்​தின் மூலம் ஆல்​பா​போல்ட் என்ற மாடலை உரு​வாக்​கியது. இதன்​மூலம் புரோட்​டீனின் 3 டி வரைபடம் உருவாக்கப்பட்டது. இதன் காரண​மாக மருத்​து​வத் துறை​யில் மிகப்பெரிய புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது. ஏஐ தொழில்​நுட்​பத்​தால் கோடிக்​கணக்​கான மக்​களின் வாழ்க்​கையை மேம்​படுத்த வேண்​டும்.

அறி​வியல் துறை​யில் மிகக் கடின​மான பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார். காபி குடித்த சுந்​தர் பிச்சை டெல்லி பாரத் மண்​டபத்​தில் மத்​திய வணிக துறை​யின் காபி ஆணை​யம் சார்​பில் அரங்கு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இங்கு சுந்​தர் பிச்சை நேற்று காபி ஆணை​யத்​தின் அரங்​குக்கு சென்​றார். அங்கு அவர் ரசித்​து, ருசித்து காபி குடித்​தார். இந்த வீடியோவை மத்​திய வணிக, தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல்​ சமூக வலை​தளத்​தில்​ வெளி​யிட்​டு உள்​ளார்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!