பிளஸ் 2 மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்வு தொடங்​கியது.

சென்னை: பிளஸ் 2 மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்வு தமிழகம் முழு​வதும் நேற்று தொடங்​கியது. மாணவ, மாணவி​கள் ஆர்​வத்​துடன் பங்​கேற்​றனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 2 முதல் ஏப்.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான இறு​திக்​கட்ட பணி​கள் நடந்து வரு​கின்​றன.

இதற்​கிடையே, ‘பொதுத் தேர்வு எழுத உள்ள 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்​வு​கள் பிப்​. 9 முதல் 14-ம் தேதி வரை நடத்​தப்​படும். மாநிலம் முழு​வதும் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மேல்​நிலைப் பள்​ளி​களில் பயிலும் சுமார் 5 லட்​சம் மாணவர்​கள் இந்தத் தேர்​வில் பங்​கேற்​கின்​றனர்’ என்று தேர்​வுத்துறை அறி​வித்​திருந்​தது.

அதன்​படி, பிளஸ் 2 வகுப்​புக்​கான செய்​முறைத் தேர்வு நேற்று தொடங்​கியது. ஒரு சுற்​றுக்கு அதி​கபட்​சம் 25 முதல் 30 மாணவர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். சென்னை நந்​தனம் அரசு மாதிரி மேல்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற செய்​முறைத் தேர்வை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பார்​வை​யிட்டார்.

செய்​முறைத் தேர்வு மதிப்​பெண்​களை, பள்​ளித் தலைமை ஆசிரியர்​கள் மூலம் பிப்​.23-க்​குள்​ உதவி இயக்​குநர்​ அலு​வல​கத்​தில்​ ஒப்​படைக்​குமாறு தேர்​வுத்​ துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!