வரலாற்றில் இன்று ( ஜூன்18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 18  கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

618 – லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
656 – அலீ ராசிதீன் கலீபாக்களின் கலீபா ஆனார்.
1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னராக எடின்பரோவில் முடிசூடினார்.
1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவைக் கைவிட்டு வெளியேறினர்.
1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
1830 – பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது.
1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
1887 – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் செருமனியும், உருசியாவும் கையெழுத்திட்டன.
1900 – வெளிநாட்டுத் தூதுவர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி ஆணை பிறப்பித்தார்.
1908 – சப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானியக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
1908 – பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
1948 – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1953 – ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
1954 – அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கா பி-52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.
1972 – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.
1979 – போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
1981 – அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1981 – கரவுத் தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான வானூர்தி லொக்கீட் எப்-117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1983 – பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1994 – வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
2006 – கசக்ஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.
2018 – சப்பான், வடக்கு ஒசாக்காவில் 5.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1799 – வில்லியம் இலாசல், ஆங்கிலேய வானியலாளர், வணிகர் (இ. 1880)
1816 – ஜங் பகதூர் ராணா, நேப்பாள மன்னர் (இ. 1877)
1882 – கியார்கி திமித்ரோவ், பல்கேரியாவின் 32வது பிரதமர் (இ. 1949)
1908 – கக்கன், தமிழக அரசியல்வாதி (இ. 1981)
1918 – உபைதுல்லா, மலேசியத் தமிழ் அரசியல்வாதி (இ. 2009)
1920 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1980)
1924 – கோபுலு, தமிழக ஓவியர் (இ. 2015)
1926 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர், அண்டவியலாளர் (இ. 2010)
1941 – பஞ்சு அருணாசலம், தமிழகத் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர் (இ. 2016)
1942 – தாபோ உம்பெக்கி, தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவர்
1948 – ஹரிலால் காந்தி, இந்திய அரசியல்வாதி, மகாத்மா காந்தியின் மூத்த மகன் (பி. 1888)
1949 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 2010)
1959 – கெயில் வாசு ஒக்சலேட், கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
1960 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
1962 – இலிசா ராண்டால், அமெரிக்க இயற்பியலாளர்
1965 – த. சதீஷ்குமார், தமிழக எழுத்தாளர்.
1986 – ரிச்சர்ட் மேடன், இசுக்கொட்டிய நடிகர்

இறப்புகள்

1753 – கிளாடு பிரான்சுவா ஜெப்ராய், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1729)
1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
1922 – யாகோபசு காப்தேயன், டச்சு வானியலாளர் (பி. 1851)
1928 – ருவால் அமுன்சென், நோர்வே விமான ஓட்டி, நாடுகாண் பயணி (பி. 1872)
1936 – மாக்சிம் கார்க்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1868)
1972 – மில்டன் இலாசெல் குமாசன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)
1977 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (பி. 1898)
1980 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1920)
2009 – அலி அக்பர் கான், இந்துத்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
2010 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீச புதின எழுத்தாளர் (பி. 1922)
2011 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1943)
2014 – இஸ்டெபனி குவோலக், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1923)

சிறப்பு நாள்

மனித உரிமைகள் நாள் (அசர்பைஜான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!