சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சுபமுகூர்த்த தினம், பக்ரீத் பண்டிகை, வாரவிடுமுறை ஆகிய காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள், ரெயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால் காலை முதலே சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கிளாம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.