வரலாற்றில் இன்று ( மே 16)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 16 கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார்.
1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது.
1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார்.
1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர்.
1770 – 14-வயது மாரீ அன்டொனெட் 15-வயது லூயி-ஆகுசுத்தைத் திருமனம் செய்தார். லூயி பின்னர் பிரான்சின் மன்னரானார்.
1811 – கூட்டுப் படைகள் (எசுப்பானியா, போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.
1812 – உருசியப் படைத் தளபதி மிக்கைல் குத்தூசொவ் புக்கரெஸ்ட் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். உருசிய-துருச்சிப் போர் (1806–12) முடிவுக்கு வந்தது. பசராபியா உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
1874 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் மில் ஆறு பெருக்கெடுத்தில் நான்கு கிராமங்கள் அழிந்தன. 139 பேர் உயிரிழந்தனர்.
1888 – நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
1891 – செருமனி, பிராங்க்புர்ட் நகரில் இடம்பெற்ற பன்னாட்டு கண்காட்சி ஒன்றில், உலகின் முதலாவது நீண்டதூர உயர்-வலுக் கடத்தி, முத்தறுவாய் மின்னோட்டம் காட்சிப்படுத்தப்பட்டது.
1916 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.[1]
1916 – பிரித்தானியாவும் பிரான்சும் முன்னைநாள் உதுமானியப் பேரரசுப் பகுதிகளான ஈராக்கு மற்றும் சிரியாவைப் இரண்டாகப் பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.
1920 – உரோமில் ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1929 – ஆலிவுடில், முதலாவது அகாதமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1932 – பம்பாயில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவா வதைமுகாம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1960 – கலிபோர்னியாவில் இயூசு ஆய்வுகூடத்தில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1966 – சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.
1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.
1974 – சோசப்பு பிரோசு டிட்டோ யுகோசுலாவியாவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1975 – பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 – ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1985 – தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.
1991 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி அமெரிக்க சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பிரித்தானிய ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
1992 – எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
1997 – சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார்.
2003 – மொரோக்கோவில் காசாபிளாங்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2004 – 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2005 – குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது.
2006 – தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006 – நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிறப்புகள்

1845 – இலியா மெச்னிகோவ், நோபல் பரிசு பெற்ற உக்ரைனிய-பிரான்சிய உயிரியலாளர் (இ. 1916)
1886 – ஏர்னெஸ்ட்டு பர்கெசு, அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1966)
1904 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் பி. 1989)
1905 – ஹென்றி ஃபோன்டா, அமெரிக்க நடிகர் (இ. 1982)
1925 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (இ. 2018)
1931 – கே. நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி
1935 – வீ. செல்வராஜ், மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)
1950 – யிகான்னசு பெட்நோர்ட்சு, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர்
1953 – பியர்ஸ் புரோஸ்னன், அயர்லாந்து-அமெரிக்க நடிகர்
1977 – கபிலன், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்
1981 – சாயா சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1620 – வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564)
1830 – ஜோசப் ஃபூரியே, பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1768)
1934 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1854)
1947 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1861)
1948 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, ஆட்சியாளர் (பி. 1869)
2004 – கமலா மார்க்கண்டேய, இந்திய ஆங்கில எழுத்தாளர் (பி. 1924)
2007 – கு. கலியபெருமாள், தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924)
2010 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (பி. 1947)
2013 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1933)
2014 – அமலெந்து டே, இந்திய-வங்காள வரலாற்றாசிரியர் (பி. 1929)

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (மலேசியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!