வரலாற்றில் இன்று (மார்ச் 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டின் 76 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான்.
180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1]
455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர்.
1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.
1845 – இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
1861 – இத்தாலி இராச்சியம் உருவானது.
1891 – பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் ஆன்சன் என்ற ஆத்திரேலியக் கப்பலுடன் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.
1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
1939 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது.
1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1948 – பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் பிரசெல்சு உடன்பட்டில் கையெழுத்திட்டன.
1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1957 – பிலிப்பீன்சு, சேபு என்ற இடத்தில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.
1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
1960 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கியூபாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதலுக்கான தேசிய பாதுகாப்பு சபையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது பன்றிகள் விரிகுடா படையெடுப்புக்கு வழிவகுத்தது.
1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
1966 – காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மத்திய தரைக் கடல்பகுதியில் எசுப்பானியாவுக்கு அருகில் கண்டுபிடித்தது.
1968 – அமெரிக்காவின் ஊட்டா மாநிலத்தில் நரம்பு வாயுவை சோதித்ததில் 6,000 இற்கும் அதிகமான ஆடுகள் இறந்தன.
1970 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
1988 – கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் உயிரிழந்தனர்.
1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1992 – ஆர்ஜெண்டீனாவில் இசுரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
2000 – உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்து, 200 பேர் காயமடைந்தனர். செர்பியாவில் 35 தேவாலயங்கள், இரண்டு பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.

பிறப்புகள்

1834 – காட்லீப் டைம்லர், செருமானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1900)
1919 – நாட் கிங் கோல், அமெரிக்கப் பாடகர் (இ. 1965)
1920 – சேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் 1வது அரசுத்தலைவர் ரி. 1975)
1926 – சீக்பிரீட் லென்சு, போலந்து-செருமனிய எழுத்தாளர் (இ. 2014)
1926 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2006)
1939 – பங்காரு லட்சுமண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)
1940 – காட்பிரீடு மூன்சென்பெர்கு, செருமானிய இயற்பியலாளர்
1940 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கை ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர் (இ. 2002)
1955 – சிந்தியா மெக்கினி, அமெரிக்க அரசியல்வாதி
1964 – ராப் லோ, அமெரிக்க நடிகர்
1975 – புனீத் ராச்குமார், இந்திய நடுகர், பாடகர்
1990 – சாய்னா நேவால், இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை

இறப்புகள்

1406 – இப்னு கல்தூன், துனீசிய சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332)
1527 – ராணா சங்கா, இந்திய ஆட்சியாளர் (பி. 1482)
1764 – ஜார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல்வாதி (பி. 1695)
1782 – டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700)
1846 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1784)
1849 – இரண்டாம் வில்லியம், இடச்சு மன்னர் (பி. 1792)
1853 – கிறிஸ்டியன் டாப்ளர், ஆத்திரிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1803)
1956 – ஐரீன் ஜோலியட் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1897)
1957 – ரமோன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (பி. 1907)
1993 – டானியல் அன்ரனி, ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1947)
2011 – கியார்கிய் ஏ.கிராசின்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1939)
2014 – மெர்சி எதிரிசிங்க, இலங்கை சிங்கள நடிகை, பாடகி (பி. 1945)
2017 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற செயின்ட் லூசியா எழுத்தாளர் (பி. 1930)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள், (வங்காளதேசம்)
தேசிய முவாய் போர நாள் (தாய்லாந்து)
புனித பேட்ரிக்கின் நாள் (அயர்லாந்து, மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!