பீஷ்மாஷ்டமி 2025

பீஷ்மாஷ்டமி 2025 : இந்த நாளில் என்ன செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் ?

பீஷ்மாஷ்டமி :

தை மாத வளர்பிறையில் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான சிறப்புடையதாகும். இவைகள் அளவில்லாத நன்மைகளை நமக்கு வழங்கக் கூடியவை. அப்படி நன்மைகளை அதிகம் தரக் கூடிய நாட்கள் தான், தை மாத வளர்பிறையில் வரும் ரத சப்தமியும், அதற்கு மறுநாள் வரும் பீஷ்மாஷ்டமியும் மிக மிக முக்கியமான நாட்களாகும். அதாவது தை மாத வளர்பிறையில் வரும் எட்டாவது திதியான அஷ்டமி, பீஷ்மாஷ்டமி என அழைக்கப்படுகிறது.

இது பிதாமகர் என போற்றப்படும் பீஷ்மர் உயிர்நீத்த நாளாக கருதப்படுகிறது.

பீஷ்மாஷ்டமி வரலாறு :

மகாபாரதத்தில், தனது தந்தைக்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து, கடைசி வரை திருமணம் செய்யாமலும், ஆட்சி பொறுப்பை ஏற்காமலும் தவ வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாக கங்கையின் மைந்தரான பீஷ்மர், தான் விரும்பும் சமயத்தில் மட்டுமே உயிரை விட முடியும் என்ற வரத்தை பெற்றார்.

மகாபாரத போரின் போது அர்ஜூனனால் அம்பு படுக்கையில் கிடத்தப்பட்ட பீஷ்மர், உத்திராயண காலத்தில் உயிர் விட வேண்டும் என காத்திருந்தார்.

ஆனாலும் அவர் உயிர் பிரியவில்லை. அப்போது அவரை பார்க்க வந்த வேத வியாசரிடம், ” நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னுடைய உயிர் இன்னும் பிரியவில்லை?” என்று கேட்டார்.

பீஷ்மருக்கு வியாசர் சொன்ன பதில் :

அதற்கு பதிலளித்த வியாசர், “ஒருவர் தான் தீமை செய்யா விட்டாலும், தன்னுடைய கண் எதிரே நடக்கும் தீமையை தடுக்காமல் இருப்பதும் பாவம் தான்.

அந்த பாவத்தில் அவனுக்கும் பங்கு உண்டு. அதற்கான தண்டனையை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்றார். அப்போது தான், கெளரவர்கள் சமையில் துச்சாதனன், திரெளபதியில் ஆடைகளை களைந்த போது அதை தடுக்காமல் தான் அமைதி காத்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனமே இல்லையா என பீஷ்மர், வியாசரிடம் கேட்க, ” உன் பாவத்தை உணர்ந்த போதே உன் பாவம் நீங்கினாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்றார்.

ரத சப்தமியில் எருக்கம் இலை குளியல் காரணம் :

சூரியனின் நெருப்பை கொண்டு தன்னுடைய உடலை பொசுக்கும்படி கேட்ட பீஷ்டமரிடம் எருக்கம் இலையை காட்டிய வியாசர், ” அர்க்கம் எனறால் சூரியன் என்று பொருள்.

தீமைகளை சுட்டு எரிப்பவர் என்பதால் தான் விநாயகருக்கு எருக்கம் இலை உகந்ததாக சொல்லப்படுகிறது.

அதே போல் உன்னுடைய பாவங்கள் நீங்க எருக்கம் இலைகளால் உன்னுடைய உடலை அலங்கரிக்கிறேன் என கூறி ஏழு எருக்கம் இலைகளை எடுத்து, பீஷ்மரின் இரண்டு கண்கள், தலை, தோள், கால் ஆகியவற்றில் வைத்தார். இதுனால் அமைதி அடைந்த பீஷ்மரின் உயிர் பிரிந்தது.

பீஷ்மாஷ்டமியில் செய்ய வேண்டியவை :

பீஷ்மருக்கு வாரிசுகள் இல்லாததால் நீத்தார் கடனை யார் செய்வது என்ற கேள்வி எழுந்தது. சூரியனுக்காக எருக்கம் இலை சூடி, ரத சப்தமி அன்று பீஷ்மர் விரதம் இருந்ததால் அவருக்காக பாரத தேசமே நீத்தார் கடன் செய்யும் என்றார்.

இதன் காரணமாகவே ரத சப்தமி அன்று ஏழு ஜென்ம பாவங்கள் நீங்க சூரியனாகிய எருக்கன் இலைகளை தலையில் வைத்து குளிக்க வேண்டும் என்கிறார்கள். இதனால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும். அதோடு ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தாலும், மூன்று முறை “பீஷ்மாய நமஹ” என சொல்லி நீர் எடுத்து விட்டாலும் அவர்களின் பாவங்கள், பித்ருதோஷங்கள் நீங்கி, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பீஷ்மாஷ்டமி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?

இந்த ஆண்டு பீஷ்மாஷ்டமி பிப்ரவரி 05ம் தேதி புதன்கிழமை வருகிறது.

அன்றைய தினம் காலை 04.16 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 06ம் தேதி அதிகாலை 03.20 வரை அஷ்டமி திதி உள்ளது. பீஷ்மாஷ்டமி என்பது பீஷ்மரை கெளரவிக்கும் நாளாகும்.
இந்த நாளில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பவர்கள், குழந்தை இல்லாத தம்பதிகள், புதிதாக திருமணமான தம்பதிகள் ஆகியோர் விரதம் இருந்து, பீஷ்மரின் அருளை வேண்டினால் அவரை போலமே உயர்வான குணமுடைய நல்ல ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே போல் பித்ரு தோஷம் உள்ளவர்களும், அதனால் குழந்தைப் பேறு தள்ளிப் போகிறவர்களும் இந்த நாளில் விரதம் இருந்தால் விரைவில் குழந்தை பிறக்கும். இந்த நாளில் பீஷ்மரை நினைத்து வழிபடுபவர்களுக்கு அவரது ஆசி கிடைப்பதுடன், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பாவம் நீங்க செய்ய வேண்டியவை :

பீஷ்மாஷ்டமி அன்று இறந்த முன்னோர்களுக்கு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்கலாம்.

கங்கை போன்ற புனித தலங்களுக்கு சென்று சென்று புனித நீராடுவது மிகவும் உயர்ந்த புண்ணிய பலனை தரும். புனித நதிகளில் நீராடி பிறகு அன்னத்தில் எள் கலந்து, ஆற்றில் கரைக்கலாம்.

இதனால் நம்முடைய பாவங்கள் கரைந்து, பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட முடியும். மாலையில் பீஷ்மாஷ்டமி மந்திரத்தை சொல்லி, நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, நன்மைகள் அதிகரிக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!