வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு..!
ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு.
* வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்வு.
* ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
2023ல் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30 சதவீதம்
* ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை- 25 சதவீதம்
* ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
* ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை- 15 சதவீதம்
* ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – ரூ.5 சதவீதம்
* ரூ.4 லட்சம் வரை- வரி இல்லை.
புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பது தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவும் கிடைக்கும். இது நடுத்தர வாழ் மாத ஊதியம் பெறும் மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.