நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது..!

 நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (56) உடல் நலக்குறைவால் இன்று (ஜன.,12) உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்த பெற்ற, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பழமை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சுவாமி அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இந்த கோவிலில்

உள்ள யானை காந்திமதி 56, உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் காந்திமதி செல்லும்.

நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக காந்திமதி உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக யானை நின்றவாறே துாங்கியது. படுத்த யானையால் மீண்டும் எழ முடியவில்லை. எனவே கோயில் அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் முன்னிலையில் யானை கிரேன் பெல்ட் மூலம் கட்டி துாக்கி நிறுத்தப்பட்டது. எனினும் நிற்க முடியவில்லை.

இந்நிலையில், இன்று (ஜன.,12) நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. காந்திமதி, நெல்லை மக்களின் அன்பைப் பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காந்திமதி யானையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். காந்திமதி யானைக்கு, அன்போடும், பாசத்தோடும் உணவுப்பொருட்களை நெல்லை மக்கள் வழங்கி வந்தனர்.

கோவில் யானை இறப்பு காரணமாக நெல்லையப்பர் கோவிலில் இன்றைய பூஜைகள் காலையுடன் நிறுத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு யானையின் இறுதி சடங்கு, பரிகார பூஜை முடிந்த பிறகே கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...