வரலாற்றில் இன்று (08.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 8 (January 8) கிரிகோரியன் ஆண்டின் எட்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார்.
1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.
1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.
1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.
1806 – கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.
1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.
1828 – ஐக்கிய அமெரிக்காவின் சனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1835 – ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் சுழிய நிலையை எட்டியது.
1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
1867 – வாசிங்டனில்யில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1889 – எர்மன் ஒல்லெரித் மின்னாற்றலில் இயங்கும் துளை அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
1906 – நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.
1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
1926 – வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.
1926 – அப்துல்லா பின் அப்துல் அசீசு எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
1946 – கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.
1961 – அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
1963 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
1964 – அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.
1972 – சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.
1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1977 – சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
1989 – இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.
1994 – உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.
1996 – சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.
2003 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.
2003 – துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
2004 – குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.
2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
2009 – இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பு நகரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2009 – கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.
2019 – தெகுரானில் இருந்து கீவ் நோக்கிச் சென்ற உக்ரைனிய போயிங் 737–800 பயணிகள் வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1823 – ஆல்பிரடு அரசல் வாலேசு, உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளர், உயிரியலாளர் (இ. 1913)
1847 – ம. க. வேற்பிள்ளை, ஈழத்து உரையாசிரியர், தமிழறிஞர், பதிப்பாசிரியர் (இ. 1930)
1867 – எமிலி கிரீன் பால்ச், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
1891 – வால்தெர் பொதே, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1957)
1894 – மாக்சிமிலியன் கோல்பே, போலந்து கத்தோலிக்கப் புனிதர் (இ. 1941)
1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)
1899 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1959)
1902 – கார்ல் ரோஜர்ஸ், அமெரிக்க உளவியலாளர் (இ. 1987)
1909 – ஆஷாபூர்ணா தேவி, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
1923 – பிரைஸ் டிவிட், அமெரிக்க இயற்பியலாளர்
1926 – கேளுச்சரண மகோபாத்திரா, இந்திய நடனக் கலைஞர் (இ. 2004)
1928 – மா. செங்குட்டுவன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர்
1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்கப் பாடகர் (இ. 1977)
1942 – ஸ்டீபன் ஹோக்கிங், ஆங்கிலேய இயற்பியலாளர், எழுத்தாளர்
1942 – ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்
1975 – ஹாரிஸ் ஜயராஜ், இந்திய இசையமைப்பாளர்
1984 – கிம் ஜொங்-உன், வடகொரியாவின் 3வது அரசுத்தலைவர்
1987 – கே, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர்

இறப்புகள்

1324 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)
1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1564)
1884 – கேசப் சந்திர சென், இந்திய இந்து மெய்யியலாளர், சீர்திருத்தவாதி (பி. 1838)
1914 – நடனகோபாலநாயகி சுவாமிகள், சௌராட்டிர மதகுரு (பி. 1843)
1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
1952 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (பி. 1866)
1976 – சோ என்லாய், சீனாவின் 1வது பிரதமர் (பி. 1898)
1994 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி (பி. 1894)
1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1911)
2008 – டி. எம். தசநாயக்க, இலங்கை அமைச்சர், அரசியல்வாதி (பி. 1953)
2009 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)
2010 – ஆர்ட் குலொக்கி, அமெரிக்க இயக்குநர் (பி. 1921)
2012 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1910)
2019 – ஜெயந்திலால் பானுசாலி, இந்திய குசராத்து அரசியல்வாதி (பி. 1964)

சிறப்பு நாள்

பொதுநலவாய நாள் (வடக்கு மரியானா தீவுகள்)
தட்டச்சு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!