திருவெம்பாவை 14
திருவெம்பாவை 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
ப்சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடோலோர் எம்பாவாய்..
பொருள் விளக்கம்
பாவை நோன்பிருக்கும் பெண்கள் குளத் தில் நீராட வருகின்றனர். “பெண்களே, நம் காதுக ளில் அணிந்துள்ள தோடுகள் ஆட வும், உடம்பி ல் அணிந்துள்ள பசும்பொன் னால் ஆகிய ஆபரணங்கள் ஆடவும், கூந்த லில் சூடியுள்ள மலர்கள் ஆடவும், அந்த மலர்களில் மொய்க்கி ன்ற வண்டுகள் ஆடவும் குளிர்ந்த நீரில் நீராடுவோம்.
அவ்வாறு நீராடுகையில் சிற்றம்பலத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக நடனமா டும் ஆடலரசனைப் போற்றுவோம்.
வேதமாகவும், வேதத்தின் பொருளாகவும் விள ங்குகின்ற சிவபெருமானையும், ஒளிவடிவாய் திகழ்கின்ற அவருடைய மேன்மையையும் பாடுவோம்.
மேலும் இறைவனின் அடையாளமாகத் திகழும் கொன்றை மாலையைப் பாடுவோம். எல்லா உயிர்களுக்கும் முதன்மையாக வும், முடிவில்லாத தன்மையுடன் விளங்கு ம் இறை வனைப் புகழ்ந்து பாடுவோம்.
உலக உயிர்களுக்கு அவர்களின் தன்மை க்கு ஏற்றவாறு, சிவஞான அமிர்தத்தை அளித்து பாதுகாக்கும் வளையல்கள் அணிந்த திருக்க ரங்களைக் கொண்ட, உமையம்மையின் திரு வடிகளை புகழ்ந்து பாடி நீராடுவோம்.” என்று கூறுகின்றனர்.
பிறப்பின்மை வேண்டுமெனில் முதலும், முடிவு ம் இல்லாமல் பரஞ்சோதியாகத் திகழும் இறை வனையும், சிவஞான அமிர்தத்தை வழங்க வல்ல இறைவியையும் தூய மனத்து டன் வழி பட வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.