குற்றால அருவியில் குளிக்க அனுமதி..!
18 நாட்களுக்கு பிறகு பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று குற்றாலம். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது.
இதன் பாரணமாக பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய குற்றாலஅருவியானது சேதமடைந்தது. இதனையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 18 நாட்களுக்கு பிறகு பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.