திருப்பாவை பாடல் 7
ஆண்டாள் அருளிய திருப்பாவை.
திருப்பாவை பாடல் 7
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான்கலந்து
பேசின பேச்சரவம்
கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவலோர் எம்பாவாய்!
பொருள்
பெண்ணே நீ நமது ஆயர்குல தலைவனின் பெண் எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டியவள் ..
நாங்கள் எல்லாம் உன்வீட்டு கதவை தட்டியும் இன்னும் உறங்குகின்றாயே!
எஙலகும் ஆனைச்சாத்தான் எனும் குருவிகள் கீச்சிடும் ஒலி கேட்கவில்லலையா.
வாசனை மிகுந்த கூந்தல் உடைய ஆயர்குலப் பெண்கள் மத்தினால் தயிர் கடையும் ஒலி கூட என்பதால் விழவில்லலையா.
அப்படி தயிர்கடையெம் போது அவர்கள் கழுத்தில் அணிந்துள்ள தாலி எழுப்பும் ஒலியும் கேட்கவில்லையா.
நாங்கள் எல்லாம் கேசவனை போற்றி பாடும்
பாடல்கேட்டும் உறங்குகின்றாயே.்
சீக்கிரம் எழுந்து கதவைத் திறவாய்.