தி ஷோ மேன் ஆஃப் பாலிவுட்
‘தி ஷோ மேன் ஆஃப் பாலிவுட்’ என்று புகழப்படும் இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநரான ராஜ்கபூர் (Raj Kapoor) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 14) ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் பிறந்தவர் இவரது தந்தை பிருத்விராஜ் கபூர் திரைப்பட, நாடக நடிகர். 1929-ல் குடும்பம் பாம்பேயில் குடியேறியது. ‘பர்சாத்’, ‘ஆவாரா’, ‘சோரி சோரி’, ‘ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதீ ஹை’ என பல வெற்றிப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்தார். 1964-ல் தனது முதல் வண்ணப்படமான ‘சங்கம்’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். இதன் வெற்றி மூலம், உலகப்புகழ் பெற்றார். இந்திய சினிமாவின் சார்லி சாப்ளின் எனப்படும் ராஜ்கபூர் 12 முறை ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ளார். 1987-ல் தாதா சாஹேப் பால்கே விருது பெற்றார். இவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர். திரை நட்சத்திரங்களாக பாலிவுட்டில் கோலோச்சி வருகின்றனர். பிரிதிவிராஜ்கபூரின் தொடங்கி நான்கு தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஹிந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது
-இளங்கோ 🌹