பெங்களூரில் “உபர் மோட்டோ வுமன்” சேவை அறிமுகம்..!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரத்தியேக பைக் ரைடுகளை வழங்க உபர் நிறுவனம் முன் வந்துள்ளது. அதற்காக பெங்களூரில் “உபர் மோட்டோ உமன்” என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தனித்துவமான சேவையின் மூலம் பெண் பயணிகளை பெண் ஓட்டுநர்களே தேவைப்படும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இது பெண்களுக்கான பாதுகாப்பு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
உபர் நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த முயற்சி பெண்களுக்கான பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பெண் ஓட்டுநர்களுக்கு கணிசமான வருவாய் வாய்ப்புகளையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த இருசக்கர சேவையின் அறிமுகம் பெண்களுக்கு தங்களின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிற்கும் உதவிகரமானதாக இருக்கும் வகையில் உபர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
“உபர் மோட்டோ உமன்” என்ற சேவையானது பெண் பயணிகளின் ஃபீட்பேக் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. உபர் இந்தியா நிறுவனத்தின் தலைவரான அபிஷேக் பத்யே கூறுகையில், “உபர் மோட்டோ வுமன் என்ற திட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவது மட்டுமல்லாமல் பெண் ஓட்டுநர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பெங்களூரில் இந்த சேவையை தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்”, என்று தெரிவித்திருந்தார்.
பெங்களூரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் இந்த “உபர் மோட்டோ உமன்” சேவை கிடைக்கும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரைடர்கள் தங்கள் பயண விவரங்களை 5 கான்டெக்டுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் போன் நம்பர் மற்றும் டிராப் ஆப் முகவரிகள் பயனரின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பாக பயன்படுத்தப்படுகிறது.
அதோடு உபர் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து செயல்முறைகளையும் கண்காணிக்கிறது. உதாரணமாக வேறு பாதை மாறி செல்லுதல், நடுவழியில் வாகனத்தை நிறுத்துதல் போன்ற அனைத்து விஷயங்களும் நிறுவனத்தின் சார்பில் கண்காணிக்கப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் பாதுகாப்பு ஹெல்ப்லைன் நம்பரை பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் அழைக்கலாம்.
இந்தியாவில் பைக் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் குறைவாக இருப்பதாலும் உபர் மோட்டோ வுமன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வேலை நேரம், குறுகிய தூர பயணங்கள் போன்றவை இந்த பிளாட்பார்மில் அதிக அதிகப் பெண் ஓட்டுநர்களை இணைக்கிறது அதேபோல உபர் மோட்டோ உமன் ஓட்டுனர்கள் “female-only” என்ற ஆப்ஷனை ஆப் செய்து அனைத்து பயணிகளையும் அழைத்துச் செல்லும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.