மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு…

 மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு…

தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. 

   இதில், பிளஸ் 2 வகுப்பு தேர்வு மார்ச் 2-இல் தொடங்கி 24 வரையும், பிளஸ் 1 வகுப்பு தேர்வு மார்ச் 4-இல் தொடங்கி 26 வரையும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 27-இல் தொடங்கி ஏப். 1-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதில் பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத இருக்கின்றனர். 

  இதுதவிர 100 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். இதேபோல் பிளஸ் 1 தேர்வை 3 லட்சத்து 85 ஆயிரத்து 867 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 252 மாணவிகளும் எழுதுகின்றனர். இதுதவிர 100 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வை 4 லட்சத்து 74 ஆயிரத்து 844 மாணவர்களும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 155 மாணவிகளும், 7 திருநங்கைகளும் எழுத இருக்கின்றனர். 

  இதுதவிர 144 சிறைவாசி தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதனிடையே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்னை அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...