உலக குரங்குகள் தினம் இன்று.
உலக குரங்குகள் தினம் இன்று. 🙊
ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்களின் பட்டியலில் இது இல்லை. என்றாலும் உலகின் பல நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பலரும் குரங்குகளின் பாதுகாப்பு குறித்தும், குரங்குகளின் புகைப்படங்கள் மற்றும் குறும்புத் தன வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
குரங்குகளை பாதுக்காக்க விழிப்புணர்வு பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். குரங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. உலகின் அனைத்து கண்டங்களிலும் அவை வாழ்கின்றன.
குரங்குகள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
உலக அளவில் 264 வகை குரங்குகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன.
குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் முன்மொழிந்த பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நினைவு கொள்வோமே