பாஜக மூத்த தலைவர் ‘எல்.கே.அத்வானி’ மருத்துவமனையில் அனுமதி..!
பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் மீண்டும் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லியில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே மருத்துவமனையில்தான் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 96 வயதான அவருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வினித் சூரி சிகிச்சை அளித்து வருகிறார்.
பாஜகவை கட்டமைத்ததிலும், அதை இந்த அளவுக்கு பெரிய அமைப்பாக வளர்த்து எடுத்ததிலும் அத்வானிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அரசியலை பொறுத்தவரை கடந்த 1999 -2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 2002-2004 வரை துணைப் பிரதமராகவும் அத்வானி பதவி வகித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம், அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் அவரால் விருது நடக்கும் இடத்திற்கு வர முடியாது என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அத்வானியின் இல்லத்திற்கு சென்று விருதை வழங்கி கவுரவித்தார்.
அத்வானிக்கு கடந்த ஜூலை மாதம் சிறுநீரக தொடர்பான தொற்று ஏற்பட்டிருந்தது. எனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓரிரு நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பியிருந்தார். ஆனால் அதே மாதத்தில் மீண்டும் அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்புவதும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிப்பதுமாக அவருடைய நாட்கள் கழிந்தன.
நரம்பியல் துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் வினித் சூரி தலைமையிலான மருத்துவ குழுதான் அத்வானிக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
இவருடைய அரசியல் பயணத்தில் மிகவும் பெரியதாக பேசப்பட்ட விஷயம் ரத யாத்திரைகள்தான். பாபர் மசூதி இடிப்புக்கும் இவருடைய ரத யாத்திரைதான் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த வழக்கிலிருந்து அத்வானியை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் தொடக்க காலத்தில் இவருடைய ரத யாத்திரை பெரிய அளவில் வெற்றியடையவில்லை.
குறிப்பாக காந்தி உயிரோடு இந்த காலத்தில், குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என்றும், புதிய கோயிலை அரசு கட்ட வேண்டும் என்று கோரி அவர் ரத யாத்திரையை மேற்கொண்டிருந்தார். இந்தியா சுதந்திரமடைந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்த காலம் அது. ரத யாத்திரைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர். காந்தியும் கூட கருத்து சொல்லியிருந்தார்.
நாள் முழுவதும் ஹே ராம் என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்த அவர், “அரசு ஏன் சோம்நாத் கோயிலை கட்ட வேண்டும்? இந்து சமூகம் அவர்களுக்கு தேவையான கோயிலை கட்டும் அளவுக்கு வலுப்பெற்றிருக்கிறது” என்று கூறியிருந்தார். அதேநேரம் நேருவும் அத்வானியின் கோரிக்கையை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.