பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும் புகழ்பெற்றார். தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக்கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்குவரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். தனது துணிச்சலான கருத்துகளால் பல எதிர்ப்புகளை சந்தித்தார்.
இவர் வித்தியாசமான கவிஞர். கடவுள், ரோஜா மலர்கள், திராட்சை ரசம், அதை ஊற்றும் இளம்பெண்கள் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இவரது கவிதைகளில் வேதாந்தமும் பரவிக் கிடக்கிறது. மதுவைப் பற்றி மிக அற்புதமாக பாடியுள்ளார். உமர் கய்யாமை நாத்திகவாதி என்று கூறுபவர்களும் உண்டு.
சாம்பிளுக்கு இக்கவிஞரின் மொழிபெயர்ப்புகளில் மிகச் சில இதோ;
சூடாகவும் குளிராகவும் இல்லாத இனிய நாள் இது
ரோஜாத்தோட்டத்தைக் கழுவித்துடைக்கின்றன
மழை மேகங்கள்
‘சிவப்பு மது’ என பாரசீக மொழியில் ரோஜாவிடம்
சொல்கிறது வானம்பாடி
தன் மஞ்சள் கன்னம் சிவக்க
.
ஓ என் காதலியே, நேற்றின் பாபங்களையும்
நாளையின் பயங்களையும்
இன்று போக்கும் கோப்பையை நிரப்பு, நாளை நான்
நேற்றின் ஏழாயிரம் வருடங்களோடு
நானாகவே இருக்கலாம்
நாளையைப்பற்றி என்ன கவலை?
.
அந்தியிலே ஒருநாள் சந்தையிலே
கண்டேன் குயவன்
களி மண்ணைத் தட்டிக்கொண்டிருந்ததை
அழிந்துபோன நாக்கோடு அது முனகியது
மெல்ல சகோதரனே, மெல்ல
.
நகரும் விரல் எழுதுகிறது. எழுதி எழுதிச் செல்கிறது
பக்தியாலோ, அறிவாலோ திரும்பப்
பெறமுடியாது பாதி வரியைக்கூட
உனது கண்ணீர் அத்தனையாலும்கூட
அழித்துவிட முடியாது
ஒரு சொல்லைக்கூட