புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰

டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰

தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ந. பிச்சமூர்த்தி ஆவார்.

தாகூர் போன்ற தாடி வைத்த அவரின் தோற்றம், மரபின் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை ஆகியன அந்தக் கருத்துக்குக் கொஞ்சம் வலுவும் சேர்த்தன. ஆனால், ந. பிச்சமூர்த்தி மரபை மட்டும் கொண்டாடும் படைப்பாளியல்ல அவர் நவீன மொழியின் புதுமையையும் பொருளின் இனிமையையும் தன்னகத்தே கொண்டவர்.பாரதிக்குப்பின் தமிழ்க் கவிதை உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல்வேறு கவியாளுமைகளும் தமிழ்க்கவிதை உலகை அணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ந. பிச்சமூர்த்தி. பாரதியின் வசன கவிதையையும் வால்ட் விட்மனின் கவிதைகளையும் தன் முன்னோடியாகக் கொண்டு புதுக்கவிதை என்னும் புதிய வகைமையைத் தொடங்கி வைத்தார்.

தத்துவார்த்தம் பிணைந்த கதைசொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்இவரது கவிதைகள் திருமூலரின் பாடல்களைப் போன்று அமைந்திருப்பதால்இவரைத் தமிழ்ப் புதுக்கவிதையின் திருமூலர் என்றும் அழைக்கின்றனர்.

தமிழ்ப் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு அதனை வளப்படுத்த அயராது பாடுபட்ட தமிழ்ப்புதுகவிதையின் தந்தையாகிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர் .

வாழ்க்கை சார்ந்த இயல்பான பார்வையே ந.பி யின் கவிதைகள். இயற்கையை அதன் அழகை, அதன் ஒழுங்கைப் பாடிவந்தாலும், சமகால வாழ்க்கையையும் அவர் பாடத் தவறவில்லை. இவரின் கிளிக்கூண்டு, காட்டுவாத்து, வழித்துணை, பெட்டிக்கடை நாராயணன் ஆகிய கவிதைகள் மிகவும் புகழ்பெற்றவை.

இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. தமிழின் புத்திலக்கியத்தின் முன்னோடி பிச்சமூர்த்தி உருவாக்கிய புத்திலக்கியம் அவரின் பெயரை என்றென்றும் தமிழிலக்கிய வரலாற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!