சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.

இன்று டிசம்பர் 4, 2014 -. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள். 😰

சொந்த ஊர் கேரளா என்ற போதிலும் அவரது தாய் மொழி தமிழாகும். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்றவர். கேரளா சட்டசபையில் கம்யுனிஸ்ட் கட்சி ஆதரவுடன் MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டு EMS நம்புதிரிபாத் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய இவர் பல்வேறு சமூக சீர்திருத்த முற்போக்கு இயக்கங்களில் பங்கெடுத்துள்ளார். 1973 ஆம் ஆண்டு முதல் 1980 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

அரசியல்வாதியாக இருந்து சுப்ரீம் கோர் நீதிபதியானவர் இவர் மட்டுமே.

மரணதண்டனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்கு என்ற முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கிருஷ்ணய்யர்.

ஒரு நபரைக் கைது செய்யும்போது அச்சுறுத்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்கள் எதுவுமில்லாத நிலையிலும் அவரது கையில் விலங்கிட்டு அழைத்து செல்வது மனித மாண்பிற்கு எதிரானது என்று கூறி அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியவரிர்.

1975-ல் அப்போதையை பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் வழக்கில் இவர் அளித்த அதிரடியான தீர்ப்பே, பின்னர் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமாக இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானிய மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய சாதாரண போஸ்டில் கடிதங்களை அனுப்பி வைத்தால், அது கூட வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடித வழி நீதி நல்கும் முறையை தீவிரமாக அமல்படுத்தினார்.

நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

அன்னாருக்கு நமது மரியாதை கலந்த அஞ்சலி உரித்தாகுக !🙏🏼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!