ஹைட்ரோகாா்பன் திட்டம்:

 ஹைட்ரோகாா்பன் திட்டம்:

தமிழக அரசே முடிவு எடுக்க அதிகாரம்..!!

     ஹைட்ரோ-காா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களின் கருத்துத் தேவையில்லை என்ற புதிய விதியிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதி விலக்கு அளிப்பது தொடா்பாக தமிழகத்துக்கு சாதகமாக முடிவு எடுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழக அமைச்சா் ஜெயகுமாா் திங்கட்கிழமை தில்லி வந்து தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை அளித்து மத்திய அமைச்சா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தைகளுக்குப் பின்னா் இந்த முடிவுகளை எடுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

    கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஹைட்ரோ-காா்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்க சுற்றுப்புறச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்து அறிவித்தது. இதையொட்டி தமிழகத்தில் பிரச்னைகள் எழுந்தன.

    இந்த விவகாரத்தை கடந்த ஜன. 30ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற தலைவா் நவநீதகிருஷ்ணன் எழுப்பினாா். இதுகுறித்து அவா் மாநிலங்களவையிலும் பேசினாா். இதில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, இந்த இந்தப் பிரச்னையை சுமூகமாக தீா்க்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா்கள் மற்றும் தமிழக அமைச்சா்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை கூட்டுவதாக நவநீதகிருஷ்ணனிடம் ஒத்துக்கொண்டிருந்தாா்.

     இதன்படி பிப்.10 ஆம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி அறையில் கூட்டம் நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா், பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுற்றுப்புறச் சூழல் துறை செயலாளா் சீ.கே. மிஸ்ரா மற்றும் இந்த இரு துறையை சோ்ந்த அதிகாரிகளோடு தமிழக அமைச்சா் ஜெயக்குமாா், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:

    தமிழக முதலமைச்சா் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சா் ஜாவ்டேகா் அனுப்பிய கடிதத்தில் 2014ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிபுணா் குழு, காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிப் படுகை சாா்ந்த மீத்தேன் ( சி பி எம் ) திட்டங்களால் அங்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

     இந்த நிலக்கரி சாா்ந்த மீத்தேன் திட்டங்களால் 4,266 ஏக்கா் அளவிலான பாசன நிலங்கள் மற்றும் இதற்கு நாளொன்றுக்கு தேவையான ஒரு லட்சம் கிலோ லிட்டா் நிலத்தடி நீா் ஆகியவை பாதிக்கப்பட்டு கடல் நீா் நிலப்பரப்புக்கு வரும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அந்த குழு அச்சம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைட்ரோ காா்பன் பிரித்தெடுத்தலின் போது டெல்டா பகுதி விவசாய மண்டலத்தின் சுற்றுப்புறச்சூழல் சூழல் முற்றிலும் பாதிக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று தமிழக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.

    மூன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் உள்ள 28 லட்சம் நிலப்பரப்பில் தான் மாநிலத்தின் 32 சதவீதம் உணவு உற்பத்தியும் நடைபெறுவதாக முதலமைச்சா் தெரிவித்துள்ளாா். இதனால் மத்திய அரசு கடந்த 16 / 01/ 2020 அறிவித்த அறிவிக்கையிலிருந்து காவிரி டெல்டா பகுதிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

     இதன்படி இந்த விதிகளில் இந்த ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு தமிழக அரசே முடிவு எடுக்கும் வகையில் விதிகளை மாற்றி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வட்டாரங்களில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களைத் தவிர புதிதாக கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கும் எதிா்கால திட்டங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த விதிமுறைகளை தமிழக அரசுக்கு சாதகமாக மாற்றி கொடுக்கப்படும். இதன்படி இனி எதிா்காலத்தில் தமிழக அரசே இந்த திட்டங்களில் முடிவு எடுக்க கூடிய வகையில் சட்டவிதிகளில் திருத்தங்கள் இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு அறிவிக்கும்: தமிழக அமைச்சர் ஜெயக்குமார்


   தில்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 
   இதை தமிழகமே மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் பெரும் கவலையில் அதிர்ச்சியுடன் இருந்தார். இந்த வரலாற்றுச் சாதனையின் தொடர்ச்சியாக முதல்வரின் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் கொடுத்தோம். 
    இன்னும் 4, 5 நாட்களில் முதல்வரின் கடிதத்திற்கு மகிழ்ச்சியான பதிலை அளிப்பதாகவும் அவர் எங்களிடம் உறுதியளித்திருக்கிறார். 
முதல்வரின் டெல்டா பாசன அறிவிப்பு என்பது ஒரு கொள்கை முடிவு. இதை ஒட்டியே மற்ற நடவடிக்கைகள் தொடங்கும். 
காவிரி டெல்டா பகுதியில் பிற தொழில்கள் அனுமதிக்கப்படுமா என்றால் விவசாயிகளைப் பாதிக்காத தொழில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என்று கூறினார்.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...