விலகாத வெண்திரை – 2 ம் அத்தியாயம்
2ம் அத்தியாயம்
சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு காலியாக கர்ப்பகிரமாய் பத்மா மட்டும் ! “மூணும் சின்னப்பிள்ளைங்க அவரு இருந்தவரையில் ஏதோ காலத்தை தள்ளிட்டே இனிமே என்ன பண்ணப்போறே ? உனக்கடுத்து இரண்டு பொட்டப்பிள்ளைங்க நீ ஏதோ தலையெடுத்திட்டேன்னு நினைச்சேன் ஊரைப் பார்த்த உன் புருஷனுக்கு உன்னையும் பிள்ளையும் பார்க்க கொடுத்து வைக்கலையே ?! ஏதோ இந்த வீடு மட்டும் நிரந்தரம் இல்லைன்னா உன் நிலமை.?” கணவனை இழந்த தன் பெண்ணிடம் பதினாறு பண்ண வந்த தந்தையும் தாயும் பேசியவை இவை, நீயும் வீட்டுக்கு பாரமா வந்திடாதே என்று மறைமுகமாய்!
மடமடவென்று வேகவைத்த இட்லிகளை தட்டில் வார்த்தார். நண்டும் சிண்டுமாய் இன்னும் சற்று நேரத்தில் தட்டை தூக்கிட்டு வந்துவிடுவார்கள் சட்னிக்கு தாளித்து கொட்டிவிட்டு சாம்பாரை பாத்திரத்தில் மாத்திவிட்டு நிமிரும் போது பள்ளிக்கூட வாத்தியார் வந்தார். “வாங்கய்யா உட்காருங்க கண்ணா