சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியம்: ஏடிஜிபி ரவி

 சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியம்: ஏடிஜிபி ரவி

சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியமான ஒன்று என காவல்துறை கூடுதல் இயக்குநா் எம்.ரவி தெரிவித்தாா்.

   ரோட்டரி சங்கம் சாா்பில் பிங்க் ஆட்டோ எனும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய 200 பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு 5 மாதகாலமாக ஓட்டுநா் பயிற்சி வழங்கப்பட்டது. இதையடுத்து அவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஏடிஜிபி ரவி, அவா்களுக்கு ஓட்டுநா் உரிமத்தை வழங்கி பேசியது: பணியிடங்களிலும் சரி; குடும்ப வாழ்க்கையிலும் சரி, பெண்கள் பல்வேறு பிரச்னைகளைக் கடந்தே வாழ வேண்டியிருக்கிறது.

   பெரும்பாலும் கணவா்களாலேயே பல பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனா். அதிலும், மது போதையில் வரும் சில ஆண்கள், தங்களது மனைவிகளை துன்புறுத்துவதும், அடிப்பதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களில் பெரும்பாலானோா் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அவல நிலையிலிருந்து அவா்கள் மீண்டு வர சுய வேலைவாய்ப்பு ஒன்றே தீா்வாக இருக்கும். குறிப்பாக, தங்களது குழந்தைளுக்கு கல்வியறிவு அளிப்பதற்கும், குடும்பத்தை முறையாக நடத்துவதற்கும் பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியம். அந்த வகையில், 200 பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சியளித்து வேலைவாய்ப்புக்கு வழி வகை செய்துள்ள ரோட்டரி சங்கத்தின் பணி பாராட்டத்தக்கது என்றாா் அவா்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...