டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்..

 டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்..

டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்.. இப்பவே வாங்கினா 18%ஆஃபர், நோ-காஸ்ட் இஎம்ஐ-ல் வாங்கிக்கலாம்

டாடா குழுமம் (Tata Group Company)-க்கு சொந்தமான நிறுவனங்களில் ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் (Stryder Cycles)-ம் ஒன்றாகும். இது ஓர் முன்னணி மிதிவண்டி தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த பிராண்டே இடிபி 200 (ETB 200) எனும் இ-பைக் (E-Bike)-கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டி ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 33,595 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், குறிப்பிட்ட கால சலுகையாக 18 சதவீத ஆஃபரையும் இந்த எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் அல்லது ஃப்ளிப்கார்ட் ஆன்-லைன் ஷாப்பிங் வாயிலாக இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் வாயிலாக ஸ்ட்ரைடர் இடிபி 200 எலெக்ட்ரிக் சைக்கிள் ஃப்ளிப்கார்ட் வாயிலாகவும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே நிறுவனத்தின் முன்னணி மாடல்கள் பல இந்த தளத்தின் வாயிலாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே புதிய இடிபி 200-ம் அந்த தளத்தில் விற்பனைக்கு இணைத்திருக்கின்றனர். இதன் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கூடுதல் சுலபமாக இந்த தயாரிப்பு சென்றடையும் என நிறுவனம் நம்புகின்றது. நகர்புற பயன்பாட்டிற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் மிதிவண்டியே இந்த ஸ்ட்ரைடர் இடிபி 200 ஆகும். இந்த வாகனத்தில் உயர் செயல்திறன்மிக்க 36 வோல்ட் 7.8 AH, ஸ்பிளாஷ் ப்ரூஃப் (தீ விபத்தை தவிர்க்கும் திறன் கொண்ட) பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை கழட்டி மீண்டும் நாமாகவே மாட்டிக் கொள்ள முடியும். ஆகையால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று அதை சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

மேலும், இந்த பேட்டரி பேக்கிற்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், வெறும் 4 மணி நேரங்களிலேயே இதை முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

இத்துடன், சிறந்த ரைடு அனுபவத்தை பெறுவதற்காக இந்த வாகனத்தில் சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் இரட்டை டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஆட்டோமேட்டிக்காக பவர் கட்-ஆஃப் ஆகும் வசதியும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் இணைந்து பாதுகாப்பான மற்றும் ரம்மியமான பயண அனுபவத்தை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, மோட்டாரை பொருத்த வரை 36 வோல்ட் 250 வாட் பிஎல்டிசி (BLDC) மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். ஆகையால், பைக்கில் வேகமாக செல்வதை போன்ற ஃபீலே இந்த எலெக்ட்ரிக் சைக்கிளிலும் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல்வேறு வசதிகளை ஸ்ட்ரைடர் இடிபி 200 அதனுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...