வரலாற்றில் இன்று (05.11.2024 )

 வரலாற்றில் இன்று (05.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 5 (November 5) கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
1605 – ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1757 – புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.
1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
1861 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
1862 – மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
1895 – தானுந்தின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.
1911 – செப்டம்பர் 29 இல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1913 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1917 – அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.
1935 – மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1967 – லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
1987 – தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
2006 – 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.

பிறப்புகள்

1854 – பவுல் செபாடியர், பிரெஞ்சு வேதியியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவர். (d. 1941)
1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
1920 – டக்லஸ் நார்த், அமெரிக்க பொருளியலாளர், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வென்றவர்.
1948 – பாப் பார்,அமெரிக்க அரசியல்வாதி
1948 – வில்லியம் டானியல் பிலிப்ஸ், அமெரிக்க இயற்பியலாளர், இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்.
1952 – வந்தனா சிவா, இந்திய இயற்பியலாளர்.
1955 – கரண் தபார், இந்திய நிருபர்.
1959 – பிரையன் ஆடம்ஸ், கனடிய பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.
1987 – கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். (ஜோனாஸ் சகோதரர்கள்)
1988 – விராட் கோலி, இந்திய துடுப்பாட்டக்காரர்.

இறப்புகள்

1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)
1879 – ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (பி. 1831)
1930 – கிறிச்டியன் ஈஜ்மன், டச்சு இயற்பியலாளர், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (b. 1858)
1944 – அலெக்சிஸ் காரெல், பிரெஞ்சு மருத்துவர், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (b. 1873)
1975 – எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909)
2011 – பூபேன் அசாரிகா, இந்திய பாடகர், இயக்குனர் மற்றும் கவிஞர் (b. 1926)

சிறப்பு நாள்

*****

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...