சென்னையில் இன்று கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடக்கம்..!

 சென்னையில் இன்று கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடக்கம்..!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. இந்த செஸ் தொடர் இன்று (நவ.5) முதல் 11ம் தேதி வரை நடைபெகிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை போட்டிகள் மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனின் உள்பட 8 வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டின் கார்த்திகேயன் முரளி, பிரணவ், பிரனேஷ், ஆர்.வைஷாலி மற்றும் ஹரிகா உள்பட 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்களும் களம் இறங்க உள்ளனர். 7 சுற்று கொண்ட இந்த போட்டி (கிளாசிக்கல்) ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும்.

உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி தனது முதல் சுற்றில் விதித் குஜராத்தியுடன் மோதுகிறார். அதேபோல், வைஷாலி – லியோன் மென்டோன்காவுடன் மோத உள்ளார். இந்த போட்டியை காண நாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டை ‘புக்மைஷோ’ என்ற இணையதளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...