குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா?
பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பிடிபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை.
பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹூதின் தீவிரவாதிகளோடு, பிடிப்பட்ட காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தேவிந்தர் சிங்குடனான (Devinder Singh) தொடர்பு பற்றி, நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு அப்போதே வாக்குமூலம் அளித்திருந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி
உள்ளது.தனது போலீஸ் வாகனத்தில், டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில், தீவிரவாதிகளை அழைத்துச் சென்றது ஏன்? டெல்லி குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா? என்பன உள்ளிட்டவை குறித்து, தேவிந்தர் சிங்கிடம் விசாரணை தீவிரமடைந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2001ம் ஆண்டு, நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு கைதாகி தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குரு, தங்களுக்கு தேவிந்தர் சிங் உதவியதாக வாக்குமூலம் அளித்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதுபற்றி விசாரிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.