பொள்ளாச்சியில் களைகட்டிய, 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

 பொள்ளாச்சியில் களைகட்டிய, 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!
பொள்ளாச்சியில் களைகட்டியுள்ள 6ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவில், பறக்கவிடப்படும் ராட்சத பலூன்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தமிழ்நாடு சார்பாக 4 வெப்பக்காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
காற்று குறைந்த காலை நேரத்தில் சுமார் 500 முதல் 800 அடி உயரத்தில் பறக்கவிடப்படும் இந்த பலூன்கள், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வட்டமடிக்கிறது.நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே பறக்கவிடப்படும் இந்த பலூன்களில் பறக்க அதிக கட்டணம் என்பதால், ஸ்பான்சர்கள் மட்டுமே பறக்கின்றனர்.சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மாலை நேரத்தில், ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தில் குறைந்த தூரத்தில் பலூன்கள் பறக்கவிடப்படுவதுடன், பார்வைக்காக வைக்கப்படும் அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...