தங்கத்தின் விலை குறையுமா குறையாதா

 தங்கத்தின் விலை குறையுமா குறையாதா
ஜனவரி 1 முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினத்தில் அத்தி பூத்தற்போல தங்கம் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இன்று மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு நீடிப்பதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கை குறைந்துள்ளது.சென்னையில் இன்று (ஜனவரி 8) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,929 ஆக உள்ளது. நேற்று 3,863 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல, நேற்று 30,904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் அதிரடியாக 528 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 31,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,975 ஆகவும், டெல்லியில் ரூ.3,983 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,001 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,850 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,836 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,847 ஆகவும், ஒசூரில் ரூ.3,849 ஆகவும், கேரளாவில் ரூ.3,783 ஆகவும் இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...