வரலாற்றில் இன்று (08.09.2024 )

 வரலாற்றில் இன்று (08.09.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 8 (September 8) கிரிகோரியன் ஆண்டின் 251 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 252 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 114 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

70 – டைட்டஸ் தலைமையிலான ரோமப் பேரரசின் படையினர் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1514 – லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.
1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
1727 – இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.
1796 – பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1831 – 4ம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.
1888 – லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
1900 – டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
1923 – கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.
1926 – நாடுகளின் கூட்டமைப்பில் செருமனி சேர்ந்தது.
1930 – ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.
1934 – நியூ ஜேர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.
1945 – சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.
1951 – பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
1959 – ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.
1991 – யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
2006 – ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

கி.மு.20/19 – கன்னி மரியா, இயேசு கிறிஸ்துவின் தாய்
1913 – ஆர். மகாதேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (இ. 1957)
1933 – ஆஷா போஸ்லே, இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி

இறப்புகள்

1980 – வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)
1995 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (பி. 1918)
2008 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1935)

சிறப்பு நாள்

மசடோனியக் குடியரசு – விடுதலை நாள் (1991)
உலக எழுத்தறிவு நாள்
அன்னை வேளாங்கண்ணி தேர்த்திருவிழா
இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாள் பிறப்பு

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...