வரலாற்றில் இன்று (22.08.2024 )

 வரலாற்றில் இன்று (22.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 22 (August 22) கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 131 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னை) அமைத்தார்கள்.
1642 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் ஆங்கில நாடாளுமன்றத்தை “துரோகிகள்” என வர்ணித்தான். ஆங்கில உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1717 – ஸ்பானியப் படைகள் சார்டீனியாவில் தரையிறங்கினர்.
1770 – ஜேம்ஸ் குக் தனது ஆட்களுடன் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையை அடைந்தான்.
1780 – கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).
1798 – ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் தரையிறங்கினர்.
1831 – வேர்ஜீனியாவில் நாட் டர்னர் தனது தாக்குதலை ஆரம்பித்தான். 50 வெள்ளையினத்தினரும், பல நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.
1848 – நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1860 – பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் கரிபால்டியின் படைகள் சிசிலியில் இருந்து இத்தாலியின் பெரும்பரப்பினுள் நுழைந்தனர்.
1864 – 12 நாடுகள் இணைந்து ஹென்றி டியூனாண்ட் தலைமையில் ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்.
1875 – சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.
1910 – கொரியா-ஜப்பான் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.
1911 – பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் முதன் முதலில் நேரடியாகப் போரில் ஈடுபட்டனர்.
1926 – தென்னாபிரிக்கா, ஜோகானஸ்பேர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கை அடைந்தனர். லெனின்கிராட் மீதான முற்றுகை ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி மீது பிரேசில் போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ருமேனியாவைக் கைப்பற்றியது.
1949 – கனடாவில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.
1962 – பிரெஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1972 – ரொடீசியா ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1978 – சண்டினீஸ்டா படைகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.
1989 – நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட்டது.
1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.

பிறப்புகள்

1877 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (இ. 1947)
1902 – லெனி ரீபென்ஸ்டால், செருமானிய நடிகை (இ. 2003)
1904 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (இ. 1997)
1920 – ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)
1975 – ரோட்ரிகோ சாண்டோரோ, பிரேசில் நடிகர்
1991 – பெட்ரிக்கோ மெக்கெடா, இத்தாலியக் காற்பந்து வீரர்

இறப்புகள்

1485 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452)
1967 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1903)
2011 – யக் லேற்ரன், கனடிய அரசியல்வாதி (பி. 1950)
2014 – யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)

சிறப்பு நாள்

சென்னை தினம்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...