வரலாற்றில் இன்று (19.08.2024 )

 வரலாற்றில் இன்று (19.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 19 (August 19) கிரிகோரியன் ஆண்டின் 231 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 232 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 134 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1862 – மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.
1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.
1919 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.
1934 – ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.
1945 – ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.
1946 – கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
1953 – பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.
1980 – சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.
1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2002 – ரஷ்யாவின் Mi-26 ரக உலங்கு வானூர்தி செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1871 – ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1948)
1918 – சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1999)
1929 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2008)
1931   -ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர் (இ. ஆகஸ்ட் 30, 2001)
1946 – பில் கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர்

இறப்புகள்

1905 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1825)
1934 – ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா, ஸ்பானிய எழுத்தாளர் (1898)
1962 – இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)
2014 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)

சிறப்பு நாள்

ஆப்கானிஸ்தான் – விடுதலை நாள் (1919)
உலகப் புகைப்பட நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...