உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை
உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை -கைத்தடி முசல்குட்டி
மாட்ரிட்: மாணவர்களுக்கு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம், எளிதாக புரிவதற்காக, உடல் உள்ளுறுப்புகள் போன்று ஆடை அணிந்து வந்து பாடம் எடுத்த ஸ்பெயின் ஆசிரியை சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்.
ஸ்பெயினிலுள்ள வாலாயோலிட் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை வெரோனிகா டியூக்(43). கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவர், 3ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம், ஸ்பானிஸ், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எடுத்து வருகிறார். இந்நிலையில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம் எடுக்க, வித்தியாசமான முறையை அவர் கையாண்டார். உடல் உள்ளுறுப்புகள் போன்று உடை அணிந்து வந்த அவர், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படி பாடம் எடுத்தார்
அன்றைய தினம் தன் மனைவியுடன் பள்ளிக்கு சென்ற வெரோனிகாவின் கணவர், இதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் 13.9 ஆயிரம் ரீடுவிட்டுகள், 69 ஆயிரம் லைக்குகள் அள்ளி வைரலானது. பலரும் அவரது இம்முயற்சியை பாராட்டினர். வரலாறு, மொழி பாடங்களை கற்பிக்கும் போதும், வெரோனிகா இதுபோல வித்தியாசமான முயற்சிகளை கடைபிடிப்பாராம்.