வரலாற்றில் இன்று (01.08.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 1 (August 1) கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 33 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.
1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
1461 – நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.
1498 – கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
1619 – முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
1820 – லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.
1831 – புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894 – கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
1902 – பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
1902 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1936 – பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
1944 – போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1952 – தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
2004 – பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.
2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்

பிறப்புகள்

1876 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)
1924 – அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (இ. 2015)
1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர் (இ. 1979)
1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்
1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கிஸ்தான் சனாதிபதி

இறப்புகள்

1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)
2008 – ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)
2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி. 1933)

சிறப்பு நாள்

உலக தாய்ப்பால் தினம்
உலக சாரணர் நாள்
அங்கோலா – இராணுவ நாள்
பெனின் – தேசிய நாள் (1960)
கொங்கோ – பெற்றோர் நாள்
லெபனான் – இராணுவ நாள்
சுவிட்சர்லாந்து – தேசிய நாள் (1291)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!